• Login / Register
  • ராசி பலன்கள்

    இன்றைய நாள் எப்படி? 19 மே 2024!

    ஞாயிற்றுக்கிழமை

    19 - 05 - 2024

    குரோதி ஆண்டு – வைகாசி – 06 ஆம் தேதி

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கும். நல்ல ஓய்வு கிடைக்கும். நல்ல சாப்பாடு கிடைக்கும். சந்தோஷத்தோடு குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். பெருசாக எந்த பிரச்சனையும் இல்லை. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். உடலுக்கு அதிகமாக சூடு தரும் பொருட்களை அளவில்லாமல் சாப்பிடாதீர்கள். தொழிலில் முதலீடு செய்யும் பொது கவனம் தேவை.

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஓய்வே கிடைக்காது. விடுமுறை நாள் என்பதால் சாதாரணமாக எல்லோருக்கும் பரபரப்போடு தான் இன்றைய நாள் செல்லும். இருந்தாலும் வீட்டில் விருந்தாளிகளின் வருகை அல்லது ஸ்பெஷலாக வெளியே செல்வது போன்ற விஷயங்கள் உங்களுக்கு அலச்சலை கொடுக்கும். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். மற்றபடி வேலை வியாபாரம் எல்லாவற்றிலும் சுமூகமான போக்கே நிலவும்.

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். விடுமுறை நாள் என்றால் கூட உங்களுடைய வேலைகளை எல்லாம் நேரத்துக்கு சரியாக முடித்து விடுவீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பாராட்டுகள் கிடைக்கும். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வந்தாலும், அந்த தடைகளை எல்லாம் தகர்த்தெறிந்து வெற்றிவாகை சூடுவீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துவோம்.

    கடகம்:

    கடக ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். எதிர்பாராத வரவு சந்தோஷத்தை கொடுக்கும். கணவரது பரிசு அல்லது பிடித்தவர்கள் கொடுக்கும் பரிசு பொருட்கள் உங்களை சந்தோஷப்படுத்தி விடும். சுப செலவுகள் உண்டாகும். மனதிற்கு பிடித்த வேலைகளை செய்வீர்கள். ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு நிறைந்த நாளாக இருக்கும். பெருசாக வேலை இருக்காது. சொந்த வியாபாரத்தில் இருப்பவர்கள் மட்டும் அவர்களுடைய வேலைகளை செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். வீட்டில் பெரியவர்களின் பேச்சை கேட்டு நடக்கவும். அடம்பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்க வேண்டாம். செலவுகளை குறைக்கப் பாருங்கள். சேமிப்பை உயர்த்துவது நன்மை தரும்.

    கன்னி:

    கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. வீட்டில் இருக்கும் பெண்கள் வீட்டை சுத்தம் செய்யக்கூடிய வேலையில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். மிச்சம் மீதி இருக்கக்கூடிய வேலை எல்லாம் சுத்தமாக முடித்துவிட்டு, இந்த நாளை சந்தோஷமாக நடத்திச் செல்வீர்கள். தொழிலில் முதலீடு செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். லாபம் இரட்டிப்பாகும். வாகனங்களில் செல்லும்போது கவனம் இருக்கட்டும்.

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வேலையில் பொறுப்புடன் நடந்து கொள்ளுங்கள். வியாபாரத்தில் கணக்கு வழக்குகளை நேரடியாக சரி பார்க்கவும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கண்மூடித்தனமாக மூன்றாவது நபரை நம்ப வேண்டாம். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் செய்யக்கூடாது.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று சின்ன சின்ன தடைகள் இருக்கும். சாதாரணமாக பேசும்போதே வார்த்தைகள் தவறும். சண்டைகள் வரும். அதனால் இன்று கொஞ்சம் கூடுதல் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். எதுவாக இருந்தாலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. கட்டுமான தொழிலில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று செலவுகள் கொஞ்சம் அதிகரிக்கும். வருமானத்தில் பிரச்சனை இருக்கும். வீட்டில் குழந்தைகள் பள்ளி படிப்புக்கு கட்டணம் கட்டுவது, அவர்களுக்கு தேவையான பொருட்களை வாங்குவது போன்ற சிக்கலில் சிக்கிக் கொள்வீர்கள். தவிர்க்க முடியாத செலவுதான். இதனால் சில பேர் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலைக்கு கூட தள்ளப்படுவார்கள். தகுதிக்கு மீறி கடன் வாங்கி மாட்டிக்காதீங்க.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு மன நிம்மதியான நாளாக இருக்க போகின்றது. எந்த ஒரு சிக்கலும் இருக்காது. கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். வீட்டில் பெரியவர்கள் உங்களுக்கு ஆதரவாக பேசுவார்கள். தடைப்பட்டு வந்த சுப காரியத்தடை மீண்டும் நடக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணத்தை மட்டும் கொஞ்சம் தவிர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமான உணவை மட்டும் சாப்பிடுங்கள்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வரவுக்கு ஏற்ற செலவு இருக்கும். நிதிநிலைமை சீராக இருக்கும். இதனாலேயே பாதி பாரம் குறையும். வேலையில் இருந்து வந்த சிக்கல்களில் இருந்து வெளி வருவீர்கள். நிம்மதியாக உங்களுடைய வேலையை கவனிப்பீர்கள். வியாபாரத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். அதையெல்லாம் பெருசு படுத்தக் கூடாது. சிக்கலில் இருந்து வெளி வருவதற்கு உண்டான வழியை தேடுங்கள்.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். சோம்பேறித்தனம் இருக்காது. சிக்கலான பிரச்சினையில் இருந்து விடுபட வேண்டும் என்று படாத பாடு படுவீர்கள். உங்களுடைய உழைப்புக்கு ஏற்ற உயர்வு கிடைக்கும். வெற்றி கிடைக்கும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள்.

    Leave A Comment