யோக பலன்களை அள்ளித்தரும் குரு பெயர்ச்சி-2024!
நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக் கூடியவர் தான் இந்த குரு பகவான். ஒருவர் செல்வ செழிப்புடன் குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், சமூகத்தில் நல்ல அந்தஸ்து என அனைத்து வித சௌபாக்கியத்துடன் வாழ காரணியாக இருப்பவர் இந்த குருபகவான்.
இவர் ஆண்டிற்கு ஒரு முறை தன்னுடைய இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார். இந்த குரு பகவானின் மாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் எப்பொழுதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
மேஷ ராசியில் பயணம் செய்து வந்த குரு பகவான் இன்று (01.05.2024) அன்று ரிஷப ராசிக்கு இடம் பெயர்கிறார். இதன் மூலம் 12 ராசிக்காரர்களுக்கும் பலவிதமான மாற்றங்கள் நிகழப் போகிறது.
அந்த வகையில் இந்த குரு பெயர்ச்சியினால் யோகத்தை அனுபவிக்க கூடிய ராசிக்காரர்களை பற்றி இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.
மேஷம்:
குருவின் இந்த பெயர்ச்சியானது மேஷ ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட கதவுகளை திறக்கப் போகிறது என்றே சொல்லலாம். இவர்கள் வேலை தொழில் வியாபாரம் அனைத்திலும் சிறந்து விளங்குவார்கள். வருமானம் அதிகரிக்கும் இதன் மூலம் சேமிப்பும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சூழ்நிலை நிலவும். திருமண தடை விலகும், குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பல விதமான அதிர்ஷ்டங்கள் வீடு தேடி வரக் கூடிய வாய்ப்புகள் உருவாகும்.
ரிஷபம்:
ரிஷப ராசிக்காரர்களுக்கு குருவின் இந்த பெயர்ச்சியால் தொழிலில் மிகப் பெரிய மாற்றம் உருவாக போகிறது. தொழில் மற்றும் வியாபாரம் பணியிடம் ஆகியவற்றில் இருந்த வந்த பிரச்சனைகள் அனைத்தும் விலகி சுமுகமான சூழ்நிலை உருவாகும். இந்த காலக்கட்டத்தில் நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முடிவும் வலுவானதாக இருக்கும். இதன் மூலம் நல்ல யோகத்தையே பெறுவீர்கள். வருமானம் பல மடங்கு அதிகரிக்கும். இதன் மூலம் பொருளாதார நிலையில் நல்ல முன்னேற்றத்தை அடைவீர்கள்.
மிதுனம்:
குருவின் இந்த பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்துள்ளது. நிதி நிலைமை நன்றாக இருக்கும். பணியிடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். அதுமட்டுமின்றி தொழில் வியாபாரம் செய்பவர்கள் இதுவரை அதில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கி சுமுகமான முறையில் முன்னேற்றத்தை காண்பீர்கள். பண வரவு அதிகரித்து பொருளாதார நிலை மேம்படும் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை நிலவும்.
கடகம்:
இந்த குரு பெயர்ச்சி காரணமாக கடக ராசிக்காரர்களுக்கு குருவின் பரிபூரணமாக அருள் கிடைக்கும். இந்த காலக்கட்டத்தில் கடக ராசிக்காரர்களின் வருமானம் அதிகரிக்கும். வாழ்க்கை துணையின் ஆதரவு கிடைக்கும். பூஜை உயர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். தொழிலில் நட்டம் இல்லாமல் லாபத்தை மட்டும் காண்பீர்கள். மாணவர்கள் படிப்பில் ஆர்வமாக இருப்பார்கள். இது வரை இருந்த தொழில் முடக்கம் அனைத்தும் நீங்கி வருமானத்தில் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.
சிம்மம்:
சிம்ம ராசி க்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் பல லாபகரமான சூழ்நிலைகள் அமைய உள்ளது. குருவின் இந்த பெயர்ச்சியால் சிம்ம ராசிக்காரர்கள் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பவர்கள். புதிய தொழில் முயற்சிகளும் உருவாகும். இதன் மூலம் வருமானம் அதிகரிக்கும் பொருளாதார நிலை உயரும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிதாக வேலை கிடைக்கும். நீங்கள் துவங்கும் காரியங்கள் எல்லாம் வெற்றியில் முடிவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு.
கன்னி:
கன்னி ராசிக்காரர்களுக்கு குருவின் இந்த பெயர்ச்சியால் குரு அளவில்லாத நற்பலன்களை அளிக்க உள்ளார். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் இவர்களுக்கு உண்டு. நீண்ட நாட்களாக தடைப்பட்ட வேலைகள் அனைத்தும் நடக்கும். வேலை வாய்ப்புகள் பெருகும் வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காணலாம். இதன் மூலம் வருமானம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும்.
ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் படி தொகுக்கப்பட்ட பலன்களாகும். உங்கள் உங்கள் சுய ஜாதக அடிப்படையில் துல்லியமான பலன்களை அறிந்து கொள்ளுங்கள்.
ஜோதிட நம்பிக்கை உள்ளவர்கள் இதனை பின்பற்றுங்கள்.
Leave A Comment