• Login / Register
  • செய்திகள்

    கருணாநிதி பச்சைத் துரோகி; முடிந்தால் கைதுசெய் - மு.க. ஸ்டாலினுக்கு சீமான் சவால்!

    முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி தமிழ் பேரினத்தின் பச்சைத் துரோகி எனத் தெரிவித்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் முடிந்தால் தன்னை கைது செய்து உள்ளே வைக்க முடியுமா என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.

    நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் கைது தொடர்பில் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் சீமான் இவ்வாறு தெரிவித்தார்.

    இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

    அது அவதூறு செயல் அல்ல. ஏற்கனவே வெளிவந்த பாடல். அதனை எழுதியவரையும் பாடியவரையும் விட்டு விட்டு மறுபடியும் எடுத்து பாடியதற்காக கைது செய்வது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுப்பிய சீமான்,

    கள்ளத்தனம் செய்த காதகன் கருணாநிதி...
    சதிகாரன் கருணாநிதி...
    சண்டாளன் கருணாநிதி...
    என்ற அந்த பாடல் வரிகளை மீளவும் பாடிக்காட்டியதுடன் இப்போது நான் பாடியுள்ளேன் என்மீது முடிந்தால் வழக்கு போட்டு கைது செய்து உள்ளே வைக்க முடியுமா என சவால் விட்டிருந்தார்.

    தேள், பாம்பு, நட்டுவக்காலி போன்றவற்றை பிடிக்க முடியுமா..? புலி, சிங்கத்தோட மோத முடியுமா...?

    முன்னாள் முதல்வர் மு.கருணாநிதி உங்களுக்கு அப்பா என்பதற்காக அதிகாரத்திற்கு வந்த உடன் புனிதர் பட்டம் கட்டப்பார்கிறார்.

    கருணாநிதி தமிழ் பேரினத்திற்கு பச்சைத் துரோகி. யார் தர்க்கம் செய்வார்...? செய்த துரோகம் எல்லாம் மறைந்து போய்விடுமா...?

    இந்த நாட்டில் தமிழர் இன வரலாற்றில் அரசியல் வரலாற்றில் தீய ஆட்சியின் தொடக்கம் தீய அரசியலின் தொடக்கம் ஐயா கருணாநிதி வந்து உட்கார்ந்த பிறகுதான். என சீமான் மேலும் தெரிவித்தார்.

    Leave A Comment