சனியின் உக்கிர பார்வை; சிக்கல்களை சந்திக்கப்போகும் ராசியினர்?
30 ஆண்டுகளுக்கு பின்னர் தனது சொந்த வீடான கும்பத்தில் சஞ்சாரம் செய்து வரும் சனி பகவான் தற்போது உக்கிர பார்வையாக இருப்பதனாள் சில ராசியை சேர்ந்தவர்களுக்கு அசுப பலன்களை சந்திக்க உள்ளனர்.
நவகிரகங்களில் நீதிமானாக விளங்க கூடியவர் சனி பகவான். ஒருவர் செய்யும் செயலுக்கு ஏற்ப பிரதி பலன்களை இரட்டிப்பாக திருப்பித் தருவதில் சனிக்கு நிகர் யாரும் இல்லை. ஆகையாலே சனி பகவானை கண்டால் அனைவருக்கும் ஒரு வித அச்ச உணர்வு ஏற்படும்.
சனிபகவானை பொறுத்த வரையில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயர் இரண்டரை ஆண்டு காலம் எடுத்துக் கொள்கிறார். கிரகங்களிலே மெதுவாக நகரக் கூடியவர் இவர் தான்.
அப்படியான சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பிறகு தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணம் செய்து வருகிறார் இந்த ஆண்டு முழுவதும் இதே ராசியில் தான் பயணிப்பார். இதனால் அனைத்து ராசிகளுக்கும் மாற்றங்கள் நிகழும்.
சனிபகவான் தற்போது உக்கிர பார்வையில் இருக்கிறார். இதனால் சில ராசிக்காரர்களுக்கு மட்டும் அசுப பலன்கள் நேர உள்ளது. யார் அந்த ராசிக்காரர்கள் என்பதை பார்க்கலாம்.
கடக ராசி
சனி பகவானின் இந்த உக்கிரப் பார்வையால் கடக ராசிக்காரர்கள் பல விதமான கஷ்டமான சூழ்நிலையை சந்திக்க போகிறார்கள். இவர்கள் எடுத்த காரியங்கள் அனைத்தும் சற்று தாமதமாக தான் நிறைவேறும். தடைகள் அதிகப்படியாக வந்து சேரும் வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வரக் கூடிய மாதங்களில் மிகவும் மிக கவனமாக இருப்பது அவசியம்.
விருச்சக ராசி:
சனியின் கோர பார்வையானது விருச்சிக ராசிக்காரர்களின் மீதும் விழுந்துள்ளது. இதனால் இவர்களும் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க உள்ளார்கள். பணம் தொடர்பான விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருப்பதும் அவசியம். எதிரிகளின் தொல்லை அதிகரிக்கும் எச்சரிக்கையாக செயல்படுங்கள். எதையும் நிதானமாக சிந்தித்து செயல்படுவது சிறந்தது.
மகர ராசி:
ஏழரை சனியின் இரண்டாவது கட்டத்தில் இருக்கக் கூடிய மகர ராசிக்காரர்களும் சனியின் கோபத்தை சிக்கி உள்ளார்கள். இந்த ராசிக்காரர்கள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மற்றவர்களிடம் பேசும் போதும் பணம் கொடுக்கல் வாங்கல் போதும் கவனமாக செயல்படுவது நல்லது. குடும்பத்தில் சிக்கல்கள் ஏற்படும் வார்த்தைகளை நிதானமாக கையாளுங்கள். கோபத்தை கட்டுப்படுத்த விட்டால் இழப்புகள் பெரிய அளவில் சந்திக்க நேரிடும். எதிலும் நிதானமாக செயல்படுங்கள்.
கும்ப ராசி:
சனி பகவான் இவர்களின் ராசி தான்பயணம் செய்து கொண்டிருக்கிறார். ஆகையால் இவர்களுக்கும் அசுப பலன்களை தருகிறார். நீங்களும் பிறரிடத்தில் பேசும் பொழுது எச்சரிக்கையாகவும் கவனமாகவும் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஏற்படும் வாக்குஸவாதங்களை தவிர்த்து விடுங்கள். கோபத்தினால் பெரும் அளவு நஷ்டத்தை சந்திக்க நேரிடும். பண விஷயத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சிந்தித்து செயல்பட்டால் விரயத்தை தவிர்க்கலாம்.
இது பொதுவான பலன்களாகும். உங்கள் உங்கள் சுய ஜாதக அடிப்படையில் துல்லியமான பலன்களை அறிந்து கொள்ளுங்கள். ஜோதிட நம்பிக்கை உள்ளவர்கள் இதனை பின்பற்றுங்கள்.
Leave A Comment