பிக் பாஸ் சீசன் 7: போட்டியாளர்கள் இவர்கள்தானா.. வெளியான தகவல்
கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன.
இந்த முறை பிக் பாஸ் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டிருப்பதாக கமல் கூறும் இரண்டாவது முன்னோட்ட விடியோ வைரலாகியுள்ளது.
ஒரு வீட்டில் புதிய போட்டியாளர்களும், இன்னொரு வீட்டில் முந்தைய சீசன்களில் பங்கேற்றவர்களில் சிலரும் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இம்முறை பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் நடிகை தர்ஷா குப்தா, அம்மு அபிராமி, நடிகர் அப்பாஸ், தொகுப்பாளர் ரக்ஷன், தொகுப்பாளினி ஜேக்லின், ஸ்ரீதர் மாஸ்டர், நடிகை ரச்சிதாவின் கணவர் தினேஷ், நடிகர் சந்தோஷ் பிரதாப், நடிகை ரேகா நாயர், நடிகர் பிரித்விராஜ்(பப்லு) உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும், பொது மக்களில் இருந்து கோவை பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா போட்டியாளராக கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், போட்டியின் தொடக்க விழாவின்போது தான் போட்டியாளர்கள் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகும் என்பது குறிப்பிடத்தக்கது
Leave A Comment