• Login / Register
  • ஆன்மிகம்

    பக்ரீத் பண்டிகை இன்று: நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகை

    இஸ்லாமியர்களின் மிக முக்கிய திருநாளான பக்ரீத் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது.நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மசூதிகளில் இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டுள்ளனர்.

    தில்லியில் பழமை வாய்ந்த ஜமா மசூதியில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்ட பின்னர், ஒருவருக்கொருவர் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர்.

    பக்ரீத்தை முன்னிட்டு இஸ்லாமியர்களுக்கு குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    மேலும், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு தில்லி, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இஸ்லாமியர்களுக்கு பக்ரீத் வாழ்த்து தெரிவித்து டிவிட்டரின் பதிவிட்டுள்ளார்.

    அதில், “பக்ரீத் பண்டிகை வாழ்த்துகள். இந்த நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொடுக்கட்டும். நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை நிலைநிறுத்தட்டும்.” என்று மோடி பதிவிட்டுள்ளார்.

    முன்னதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்திருந்தனர்.



    Leave A Comment