• Login / Register
  • மேலும்

    தினமும் 5 வால் நட்; இத்தனை நன்மைகளா? - எப்படி சாப்பிடலாம்?

    அதிகளவான நன்மைகளை உடலுக்கு தரும் வால் நட் பருப்பு 5 ஐ தினமும் வெறும் வயிற்றில் அதுவும் ஊறவைத்து சாப்பிடுவதனால் மேலும் பல நன்மைகள் கிடைக்கும்.

    பாரம்பரிய வாழ்வியலை கடந்து அவசர உலகில் சஞ்சாரம் செய்யத்தொடங்கிவிட்ட பின்னர் உடல் ஆராக்கியத்தினை பேணுவது என்பது தற்காலத்தில் பெரும் சவால்மிக்கதாக மாறிவிட்டது.

    பாரம்பரிய வாழ்வியல் முறையில் எமது உடலுக்கு அத்தியாவசியமான அனைத்தும் கிடைக்கும்வகையில் அமைந்திருந்தது.

    சித்தர்கள் வழியை பின்பற்றி எமது முன்னவர்களின் வழித்தோன்றல்களால் வாழ்வியல் முறையாக கடத்தப்பட்ட பாரம்பரியம் இன்று கிராமப்புறங்களிலும் கனவாகிப்போகும் நிலை ஏற்பட்டுள்ளது.

    பாரம்பரிய வாழ்வியல் முறையில் உணவு பழக்க வழக்கம் பிரதானமாக மேற்குறித்த வரப்பிரசாதத்தை எமக்கு வழங்கிவந்தன.

    இன்று அவசர உலகில் சஞ்சாரம் செய்து நவநாகரீக வாழ்க்கை முறையை வரித்துக்கொண்ட பின்னர் எமது உணவுப்பழக்க வழக்கங்களும் எமது வாழ்வியலுக்கும் சூழலுக்கும் ஒவ்வாததாக மாறிவிட்டது.

    இதன்காரணமாகவே கணிப்புகளை மிஞ்சிய நோய்களும், உடல் உபாதைகளும் ஏன் அதிவிரைவான மரணமும் சம்பவித்து வருவதனை மறுக்கமுடியாது.

    இந்நிலையில் தான் உடல் நலத்திற்கு ஆரோக்கியமான விடயங்களை தேடித்தேடி அறிந்து எடுத்துக்கொள்ளும் நிலை தவிர்க்கமுடியாததாகியுள்ளது.

    அந்தவகையில், இந்த பதிவில் வால் நட் பருப்பின் நன்மைகள் தொடர்பிலும் அதனை ஊறவைத்து சாப்பிடுவதானல் ஏற்படும் நன்மைகள் தொடர்பிலும் பார்க்கலாம்.

    வால் நட் பருப்பின் நன்மைகள் 

    வால்நட்டில் நார்ச்சத்து, மாக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், வைட்டமின் இ மற்றும் பாலிபீனால் போன்ற ஆண்டி ஆக்ஸிடெண்டும் உள்ளது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் மற்றும் நாள்பட்ட நோய்களிலிருந்து நம்மை காக்கிறது.

    வால்நட் என்னும் அக்ரூட் பருப்பு (walnuts) நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைப்பதில் உதவுகிறது.

    ஊறவைத்த வால்நட்டில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட், ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிகம் காணப்படுகிறது.

    சுவையை பொறுத்தவரை வால்நட்ஸ், மற்ற பருப்புகளை காட்டிலும் கசப்பாக இருக்கும். கசப்பை விரும்பாதவர்கள் தேனில் கலந்து உண்ணலாம். ஆனால் ஊறவைத்தால் கொஞ்சம் கசப்பு தெரியாது. 

    வால்நட் சத்துக்களின் பட்டியல்! (walnuts benefits tamil)

    கொழுப்பு இல்லை, ஆனால் புரதம் – 15 கி உள்ளது. சோடியம் – 0.2 மி.கி, ரத்த அழுத்தம் குறைக்க உதவும் பொட்டாசியம் – 441 மி.கி என்ற அளவில் உள்ளது. 

    வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் பி12, கால்சியம் ஆகிய ஊட்டச்சத்துக்களும் இதில் உள்ளன. 

    மூளை செயல்பாடு 

    வால்நட்டில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மூளையின் செயல்பாட்டை மேம்பாடு அடைய செய்கிறது. குழந்தைகளுக்கு இந்த பருப்பை கொடுப்பதால் அவர்களுடைய சிந்தனை திறன் மேம்படும். நாள்தோறும் காலையில் 5 வால்நட் பருப்புகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். நினைவாற்றலை மேம்படுத்தும்.

    புற்றுநோய் எதிர்ப்பு பண்பு 

    நாள்தோறும் ஊறவைத்த வால்நட் பருப்பை பெண்கள் சாப்பிட்டு வந்தால் அவர்களுக்கு மார்பக புற்று நோய் வரும் வாய்ப்பு குறையும். கணைய புற்றுநோய் அபாயத்தையும் இது தடுப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. புற்றுநோய் தாக்கத்திலிருந்து தப்பிக்க ஊற வைத்த வால்நட்டை தினமும் உண்ணலாம். 

    நல்ல தூக்கம் 

    இரவில் தூக்க கோளாறால் அவதிப்படுபவர்கள் வால்நட் சாப்பிட்டு வந்தால் நிம்மதியான தூக்கம் வரும். நாள்தோறும் இரவில் சாப்பாட்டுக்கு பின்னர் பாலில் வால்நட்ஸ் போட்டு அல்லது தனியாக அதை எடுத்துக் கொள்ளலாம். இதனால் தூக்கமின்மை பிரச்சனை சரியாகிவிடும். ஆழ்ந்த உறக்கம் வரும். 

    ​நோய் எதிர்ப்பு சக்தி

    வால்நட்ஸில் உள்ள புரதச்சத்தும், நல்ல கொழுப்பு சத்தும் நம் உடலுக்கு அதிக ஆற்றலை வழங்கும். ஊறவைத்த வால்நட்ஸை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும். 

    எடை குறைப்பு 

    உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வால்நட்ஸ் என்ற அக்ரூட் உண்ணலாம். இதில் கெட்ட கொழுப்பு இல்லை என்பதால் உடலுக்கு தேவையான புரதம் கிடைக்கும். நீண்ட நேரம் வயிறு நிரம்பி காணப்படும். அடிக்கடி பசி எடுக்காது. 

    வால்நட்ஸில் உள்ள வைட்டமின் பி7 தலைமுடியை வலிமையாக்கும். இதனால் தலைமுடி உதிர்வு குறையும். முடி நன்கு வளரும். 

    இளமையாக இருக்கலாம் 

    உடலின் வறட்சியை போக்க வால்நட்ஸ் உதவுகிறது. உங்களுடைய நெற்றி, சருமத்தில் வரும் சருமச் சுருக்கம் நீங்கி, சருமம் எப்போதும் ஈரப்பதமாக இருக்கும். வால்நட்ஸை கொஞ்சம் பால் கலந்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளுங்கள். இதை சருமத்தில் பூசினால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும். இதனால் சரும அழுக்கு, கருந்திட்டுக்கள் நீங்கும். 

    அஜீரணக் கோளாறு 

    மலச்சிக்கல் இருந்தால் உடலில் பல உடல்நல கோளாறுகள் ஏற்படும். அதற்கு அஜீரணக் கோளாறு முக்கிய காரணம். செரிமான கோளாறு இருப்பவர்கள் நாள்தோறும் ஊறவைத்த வால்நட்ஸ் உண்பதால் செரிமான கோளாறு சரியாகும். வயிற்றில் சுரக்கும் அமிலங்களும் சீராகும். 

    ​பித்தப்பை கற்கள் நீங்கும்

    பித்தப்பையில் கற்கள் பிரச்சனை இருப்பவர்கள் இந்த பருப்பை ஊறவைத்து உண்ணலாம். இப்படி வால்நட்ஸை நாள்தோறும் சாப்பிட்டால் பித்தப்பை கற்கள் மெல்ல கரையும். உங்களுக்கு வலிக்காமல் கற்கள் வெளியேறிவிடும். 

    ஏன் வால்நட்டை சாப்பிடுவதற்கு முன் ஊற வைக்க வேண்டும்?
    சிலர் வால்நட்டை சாப்பிடுவதற்கு முன் அதை தண்ணீரில் ஊற வைக்கிறார்கள். இப்படி ஊற வைத்து சாப்பிடுவதால் எளிதாக செரிமானம் ஆவதோடு வால்நட்டின் கசப்புத்தன்மையும் குறைகிறது. அதோடு அதன் ஊட்டச்சத்தும் உடலில் முழுதாக உறிஞ்சப்படுகிறது.

    செரிமானத்தை அதிகபடுத்துகிறது

    ஊற வைத்த வால்நட்டை சாப்பிட்டால் எளிதில் செரிமானம் ஆகும். வால்நட்டில் நொதி தடுப்பான்களும் பைடிக் ஆசிடும் இருப்பதால் எளிதில் செரிமானம் ஆகாது. இரவு முழுவதும் வால்நட்டை தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம் நொதி தடுப்பான்களும் பைடிக் ஆசிடின் அளவும் குறைகிறது.

    பச்சையாக வால்நட்டை சாப்பிடுபவர்களோடு ஒப்பிடுகையில் ஊறவைத்த வால்நட்டை சாப்பிடுபவர்களிடையே குறைவான அளவே வயிறு உப்புசம், வாய்வுத் தொல்லை போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ​

    கசப்புத்தன்மை குறைகிறது

    வால்நட்டில் இயற்கையாகவே டேனின் என்ற கலவை உள்ளது. இது வால்நட்டிற்கு கசப்புத்தன்மையை தருகிறது. நாம் வால்நட்டை தண்ணீரில் ஊறவைப்பதன் மூலம் இதிலுள்ள கசப்புத்தன்மை குறைகிறது. கசப்பு சுவை பிடிக்காதவர்கள் இப்படி சாப்பிடலாம்.

    ஊட்டச்சத்து உறிஞ்சப்படுவதை மேம்படுத்துகிறது

    வால்நட்டை தண்ணீரில் ஊறவைப்பதால் அதிலுள்ள பைடிக் ஆசிடின் அளவு குறைகிறது. இதனால் வால்நட்டில் உள்ள ஊட்டச்சத்தை செரிமானப் பாதை எளிதாக உறிஞ்சுகிறது. ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள் மற்றும் தாவர அடிப்படையிலான உணவுமுறையை பின்பற்றுபவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். வால்நட்டில் கால்சியம், துத்தநாகம் மற்றும் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது.

    அழுக்குகள் நீங்குகிறது

    வால்நட்டை தண்ணீரில் ஊறவைப்பதால் அதன் மேற்பரப்பில் உள்ள பாக்டீரியா, அழுக்குகள், கசடுகள் நீங்கி சுத்தமாகின்றன.

    தண்ணீரோடு கொஞ்சம் உப்பு அல்லது வினிகர் கலந்து வால்நட்டை ஊறவைத்தால், அதிலுள்ள கிருமிகள் அகல்வதோடு உணவு மூலம் பரவும் நோய்கள் வருவது குறைகிறது.

    மிருதுவாகிறது

    பச்சையான வால்நட்டை விட தண்ணீரில் ஊறவைத்த வால்நட் மிருதுவாக இருக்கும். இதனால் ஸ்மூதி, சாசேஜ் அல்லது ஜூஸ் செய்வதற்கு எளிதாக இருக்கிறது. சில ரெசிபிகளுக்கு ஊறவைத்த வால்நட்டை பயன்படுத்தினால் மட்டுமே அதன் சுவை நன்றாக இருக்கும்.

    வால்நட்டில் உள்ள ஊட்டச்சத்து

    வால்நட்டில் ஓமேகா-3 ஃபேட்டி ஆசிட் அதிகமாக உள்ளது. முக்கியமாக இதிலுள்ள ஆல்பா லினோலெனிக் ஆசிட் வீக்கத்தை குறைத்து கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்தி இதய ஆரோக்கியத்திற்கு உதவி புரிகிறது.

    மேலும் வால்நட்டில் நார்ச்சத்து, மாக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர், வைட்டமின் இ மற்றும் பாலிபீனால் போன்ற ஆண்டி ஆக்ஸிடெண்டும் உள்ளது. இது ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம் மற்றும் நாள்பட்ட நோய்களிலிருந்து நம்மை காக்கிறது.

    வால்நட்டை எப்போது சாப்பிட வேண்டும்?

    வால்நட்டை எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம். எனினும் உணவு சாப்பிடுவதற்கு முன்போ அல்லது காலை உணவு கூடவோ, சாலடாகவோ அல்லது டெஸர்டாகவோ சாப்பிடலாம்.

    இது நமது பசியை கட்டுப்படுத்துவதோடு வயிறு நிறைந்த திருப்தியை தருகிறது. அதற்கு வால்நட்டில் உள்ள புரதம், நார்ச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு ஆகியவையே காரணமாகும். இரவு படுப்பதற்கு முன் வால்நட் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

    Leave A Comment