பாக்கியலட்சுமி தொடரிலிருந்து விலகிவிட்டாரா முக்கிய நடிகை...?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடரிலிருந்து முக்கிய பிரபலம் ஒருவர் விலகியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 2020ஆம் ஆண்டு முதல் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஸ்ரீமோயி' என்ற பெங்காலி மொழித் தொடரின் மறு உருவாக்கமாக பாக்கியலட்சுமி தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பாக்கியலட்சுமி தொடரிலிருந்து அமிர்தா கதாபாத்திரத்தில் நடித்துவந்த ரித்திகா விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், ரித்திகா தரப்பில் இருந்து உறுதிபடுத்தப்பட்ட தகவல் ஏதும் இதுவரை வெளியாகவில்லை.
ரித்திகா நடித்துவந்த கதாபாத்திரத்தில் அக்ஷிதா அசோக் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது, அக்ஷிதா காற்றுக்கென்ன வேலி தொடரில் அபி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave A Comment