ஏழரை சனியின் பாதிப்புகள் குறைய மகா சிவராத்திரி வழிபாடு!
ஏழரை சனியின் பாதிப்புகளினால் அவதிப்படுபவர்கள் இன்றைய மகா சிவராத்திரி தின வழிபாட்டினை மேற்கொண்டு அந்த பாதிப்புகளில் இருந்து விடுபட முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த ஆண்டின் மகா சிவராத்திரி இன்று (மார்ச் 08) கொண்டாடப்படுகிறது.
இந்நாளில் சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் சிறப்பு பூஜைகளை செய்து வழிபடுவது வழக்கம். இந்துகளின் முக்கிய விரதங்களில் மகா சிவராத்திரியும் ஒன்றாகும்.
இன்றைய சிவராத்திரி தினத்தில் சிவபெருமான் மற்றும் பார்வதி தேவிக்கு செய்யப்படும் பூஜைகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை.
அதுமட்டுமின்றி இந்த நன்னாளில் சில சிறப்பு பரிகாரங்களை செய்வதன் முலம், ஏழரை சனியின் தாக்கத்தில் இருந்து விடுபடலாம் என்றும் கூறப்படுகிறது.
ஏனெனில் சிவபெருமானின் தீவிர பக்தர் தான் சனி பகவான். எனவே சிவபெருமானை சரியான வழியில் வழிபடும் போது, சிவனின் ஆசியால் வாழ்வில் செல்வமும், மகிழ்ச்சியும் பெருகும் என்பது நம்பிக்கை.
இப்போது மகா சிவராத்திரி நாளில் ஏழரை சனியின் மோசமான தாக்கத்தைக் குறைக்கவும், அதிலிருந்து விடுபடவும் செய்ய வேண்டியவைகள் குறித்து காண்போம்.
வன்னி இலை பூஜையும் மகா மிருத்யுஞ்சய மந்திர பாராயணமும்
மகா சிவராத்திரி நாளில் சிவபெருமானை வழிபடும் போது, சிவனின் அருளை எளிதில் பெற வேண்டுமானால், வன்னிமர இலைகளை படைத்து பூஜித்து, 108 முறை "மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை" பாராயணம் செய்யுங்கள்.
இப்படி செய்வதன் மூலும், ஏழரை சனியின் தாக்கம் அல்லது சனியின் தோஷத்தில் இருந்து விடுபடலாம் என்று நம்பப்படுகிறது.
சிவ சாலிசாவை பாராயணம்
ஏழரை சனி நடப்பவர்கள், சனி பகவானால் வாழ்வில் தாங்க முடியாத பலவிதமான பிரச்சனைகளை சந்தித்து வந்தால், அதிலிருந்து விடுபட மகா சிவராத்திரி நாளில் சிவ சாலிசாவை பாராயணம் செய்யுங்கள்.
இவ்வாறு சொல்வதன் மூலம், சனியின் தாக்கம் குறையும்.
ஏழை எளியோருக்கு தானம்
சிவபெருமானை மகிழ்விக்கவும், அவரது ஆசியைப் பெறவும் நினைத்தால், மகா சிவராத்திரி நாளில் ஏழை எளியோருக்கு தானம் செய்யுங்கள். அதுவும் வில்வ மரத்திற்கு அடியில் அமர்ந்திருக்கும் ஏழை எளியோருக்கு தானம் செய்தால், சனி தோஷத்தில் இருந்து விடுபடலாம் என்பது நம்பிக்கை.
வாழ்வில் மகிழ்ச்சியும், செல்வமும் பெருக அபிஷேகம்
மங்களகரமான மகா சிவராத்திரி நாளில் கங்கை நீரில் எள்ளு விதைகள் மற்றும் சர்க்கரை சேர்த்து கலந்து, சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்யுங்கள். இப்படி செய்வதனால் சிவபெருமானின் ஆசியுடன், சனி பகவானின் ஆசீர்வாதமும் கிடைத்து, வாழ்வில் மகிழ்ச்சியும், செல்வமும் பெருகுவதாக நம்பப்படுகிறது.
மேலே கூறப்பட்டவை ஆன்மீக தகவல்களின் அடிப்படையிலான தகவல்களை அடிப்படையாக கொண்ட பதிவே. நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றவும்.
Leave A Comment