• Login / Register
  • செய்திகள்

    மலையக தமிழ் இளைஞன் சரிகமப நிழ்ச்சிக்கு தெரிவாகி சாதனை!

    இந்திய தொலைக்காட்சி நடத்தும் இசை போட்டி நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான குரல் தேர்வில் தெரிவாகி மலையகத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவன் சாதனை படைத்துள்ளான்.

    இந்திய தொலைக்காட்சியான ஜீ தமிழ் நடத்திய சரிகமப இசை நிகழ்ச்சியின் கடந்த போட்டித் தொடரில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிஷா தனது அபார திறமை மூலம் வாகையர் பட்டத்தை சூடி சாதனை படைத்திருந்தார்.

    குறித்த போட்டித் தொடரின் போது மலையத்தில் இருந்து தெரிவாகியிருந்த அசானி தாமதமாக பங்கேற்று இசை தொடர்பான முன்னனுபவம் ஏதுமற்ற நிலையிலும் பிரமாணட்ட இசை மேடையில் தனது இசை திறனை வெளிப்படுத்தி எல்லோரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

    இந்நிலையில் மலையக மண்ணில் இருந்து பூனாகலை கபரகலையூரை சேர்ந்த இந்திரஜித் என்ற தமிழ் இளைஞனும் ஜீ தமிழ் சரிகமப இசை போட்டி நிகழ்ச்சிக்கு தேர்வாகியுள்ளார்.

    சக்தி தொலைக்காட்சியிலும் ஊவா வானலையிலும் தனது திறமையை நிருபித்த இந்திரஜித் இடைவிடாத தனது முயற்சியால் தற்போது  இந்திய தொலைக்காட்சி இசை போட்டி நிகழ்ச்சியில் தடம் பதித்து முதல்கட்ட குரல் தேர்வில் தெரிவாகி தனது திறமையை வெளிக்காட்டி நடுவர்களையும் இசை ரசிகர்களையும் வியப்படைய செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    ஏப்ரல் 27 சனி, ஞாயிறு தினங்களில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ள பகுதியில் குறித்த மலைகய தமிழ் இளைஞன் குரல் தேர்வு போட்டியில் பாடிய பாடல் ஒளிபரப்பாக உள்ளது.

    Leave A Comment