• Login / Register
  • மேலும்

    ஆணாக மாறிய மணப்பெண்; நிறுத்தப்பட்ட திருமணம் - மருத்துவர்கள் எச்சரிக்கை!

    திருமணத்திற்கு நாள் குறிக்கப்பட்ட நிலையில் குறித்த தினத்திற்கு முன்னதாக மணப் பெண் உடல் ரீதியாக ஆணாக இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    குறித்த சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

    சீனாவில் திருமணத்திற்கு முன்பு மண மக்களிற்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுவது வழக்கமான நடைமுறையாக இருந்து வருகிறது.

    அவ்வாறு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையின் போதே மணமகள் உடல் ரீதியாக ஆணாக இருக்கும் அதிர்ச்சி தகவல் வெளிப்பட்டுள்ளது.

    குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

    மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த 27 வயதான லி யுவானுக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) திருமணம் செய்து வைக்க உறவினர்கள் முடிவு செய்தனர்.

    இதையடுத்து, சீனாவில் திருமணத்திற்கு முன்பு வழக்கமாக நடத்தப்படும் மருத்துவப் பரிசோதனையில், அவர் உடல்ரீதியாக ஆணாக இருப்பது தெரியவந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    அதாவது, 16 வயதில் பருவம் எய்திய லி யுவானுக்கு, அடுத்த சில மாதங்களிலேயே மாதவிடாய் முழுமையாக நின்றதோடு, மார்பகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளிலும் பெண்ணுக்கான வளர்ச்சி ஏற்படவில்லை.

    இதனால், கவலையடைந்த அவர், மருத்துவமனைக்கு சென்றபோது, அவரின் வயிற்றுப் பகுதியில், ஆண்களுக்கான விதைப்பை இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, மேற்கொண்டு மருத்துவ ஆய்வு செய்யும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தினாலும், அப்போது அவர் அதை பெரிதாக கண்டுகொள்ளவில்லை.

    தற்போது 27 வயதாகும் அவர் திருமணத்திற்கு முன்பு மருத்துவப் பரிசோதனை செய்த நிலையில், அவர் உடல்ரீதியாக ஆணாக இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அவர் மட்டுமின்றி, மணமகன் மற்றும் உறவினர்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

    இதையடுத்து, திருமணம் நிறுத்தப்பட்ட நிலையில், லி யுவான் வயிற்றுப் பகுதியில் இருக்கும் விதைப்பையால் புற்றுநோய் ஆபத்து இருப்பதாக, மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

    இதையடுத்து, அதை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றியுள்ள லி யுவான், இனி ஆணாக வாழ்வதா, பெண்ணாக வாழ்வதா என்ற குழப்பத்தில் ஆழ்ந்துள்ளார்.

    கரு உண்ணடாகும் போது இருபாலினத்திற்கான அடிப்படை கூறுகளோடு அமைவதும் கரு வளர்ச்சியடையும் போது ஆணாகவோ பெண்ணாகவோ அமையும் போது அதற்கேற்றவாறான உடல் அமைப்புகள் உருவாகுவது இயல்பாகும்.

    சில சந்தர்ப்பங்களில் ஹோர்மோன் சமநிலை பாதிப்பு காரணமாக பால் நிலை வேறுபாடு தெளிவற்ற நிலை உடலிலயல் ரீதியாக அமையாது ஆணா பெண்ணா என்ற குழப்பம் அவர்களுக்கே ஏற்பட்டு வரும்வகையில் அமைந்துவிடுகிறது.

    அவ்வாறு குறித்த நபர் பெண்ணாக வளர்ந்து வந்த நிலையில் ஆணுக்கான விதை அமைப்பும் ஒருசேர வளர்ச்சி அடைந்து வெளிப்படாது வயிற்று பகுதியிலேயே இருந்துள்ளது. இதன் காரணமாகவே இந்த மாற்றம் நிகழ்ந்திருக்கலாம் என கருதப்படுக்கின்றது.

    Leave A Comment