• Login / Register
  • சோதிடம்

    குரு பெயர்ச்சி-2024; அவதானமாக செயற்பட வேண்டிய 7 ராசிக்காரர்கள்!

    குரு பெயர்ச்சி மூலம் பண விடயங்களில் 7 ராசியினர் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டிய நிலை உருவாகும் என கணிக்கப்பட்டுள்ளது.

    நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக் கூடியவர் தான் இந்த குரு பகவான். ஒருவர் செல்வ செழிப்புடன் குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், சமூகத்தில் நல்ல அந்தஸ்து என அனைத்து வித சௌபாக்கியத்துடன் வாழ காரணியாக இருப்பவர் இந்த குருபகவான்.

    இவர் ஆண்டிற்கு ஒரு முறை தன்னுடைய இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார். இந்த குரு பகவானின் மாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் எப்பொழுதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

    மேஷ ராசியில் பயணம் செய்து வந்த குரு பகவான் 01.05.2024 முதல் ரிஷப ராசிக்கு பெயர்ச்சியானியுள்ளார். இதன் மூலம் 12 ராசிக்காரர்களுக்கும் பலவிதமான மாற்றங்கள் நிகழப் போகிறது.

    இந்த பெயர்ச்சியின் மூலம் குறிப்பிட்ட ஏழு ராசிகளுக்கு பணவிரயம் ஏற்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

    பிரச்சனைகளை எதிர்கொள்ள போகும் அந்த 7 ராசிக்காரர்கள் யார் யார். இந்த குரு பெயர்ச்சி, அந்த ஏழு ராசி சிகரங்களுக்கும் என்னென்ன நன்மை தீமைகளை எல்லாம் கொண்டு வந்து சேர்க்கும் என்பதைப் பற்றிய விரிவான தகவலை இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம்.

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்கள் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். புதுசாக தொழில் தொடங்குவதாக இருந்தால் ரொம்ப ரொம்ப உழைப்பை முதலீடாக போடணும். முதலீடு சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கணும். நீங்க தொழில் செய்பவர்களாக இருந்தால் அதில் புதிய முதலீட்டை செய்ய வேண்டாம். அதிகமான கடனுக்கு வியாபாரம் செய்யாதீங்க. யாரையும் நம்பியும் கடன் கொடுக்காதீர்கள்.

    எந்த பிரச்சினையாக இருந்தாலும், அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் பொறுமையாக நடக்கவும். கணவன் மனைவிக்கிடையே பிரச்சனை இருந்தால் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து நடக்கவும். இதையெல்லாம் தாண்டி உங்களுக்கு சுபகாரியங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளது.

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி ஓரளவுக்கு நன்மையை செய்யும். உங்களுக்கு பணம் சம்பந்தப்பட்ட இழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எதிர்பாராத மருத்துவ செலவு வரலாம். எதிர்பாராத வீண் விரைய செலவுகள், கையில் இருக்கும் சேமிப்பை கரைக்கலாம். நீங்க வேணும்னா உங்க கையில் இருக்கும் பணத்தை சுபா செலவுகளுக்காக மாற்றி செலவு செய்யலாம்.

    தங்கம் வாங்குவது நிலம் வாங்குவது வீடு வாங்குவது போன்ற நல்ல காரியங்களை செய்யலாம். அப்படி இல்லை என்றால் அடுத்தவர்களுக்கு தானம் தர்மம் செய்தீர்கள் என்றால் வீண் விரைய செலவுகளை குறைக்க முடியும்.

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி 50% நல்லதையும், 50% பிரச்சனையும் கொடுக்கவிருக்கின்றது. இதனால் நீங்க ஓரளவுக்கு உங்களுடைய பிரச்சனைகளை சமாளித்து விடுவீர்கள். அதற்கு உண்டான ஆசீர்வாதத்தை குரு பகவான் உங்களுக்கு கொடுத்து விடுவார்.

    ஆனால் பிரச்சனைகள் வரும் போது அதிலிருந்து சீக்கிரம் மீழுவதற்கு உண்டான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சோம்பேறித்தனப்பட்டு மந்த பட்டு துவண்டு போய் அப்படியே ஒரு இடத்தில் உட்கார்ந்து விடக்கூடாது. உங்களை நீங்களே ஊக்குவித்துக் கொள்ளுங்கள்.

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் ரொம்ப ரொம்ப நம்பிக்கையோடு இருக்க வேண்டும். சின்ன சின்ன தோல்விகள் வந்தாலும் துவண்டு போய் விடக்கூடாது. உங்களுக்கு பிரச்சனைகள் வரும். ஆனால் அந்த பிரச்சனைகளை சமாளிப்பதற்கு உண்டான வழியை அந்த கடவுள் மனித ரூபத்தில் காண்பித்துக் கொடுப்பான்.

    ஆகவே பிரச்சினை வந்துவிட்டதே என்று சோர்ந்து போகிறாதிங்க. பிரச்சனைகளை கடந்து செல்வதற்கு உண்டான வழியை விடாமல் தேடுங்கள் நிச்சயம் உங்களுக்கு நல்லது நடக்கும். எதிரிகளிடம் ரொம்ப ரொம்ப உஷாரா இருங்க.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்கள் எந்த விஷயத்திலும் அகலமாக கால் வைக்காதீங்க. அதிகமாக கடன் வாங்காதீங்க. கூடுமானவரை அடுத்தவர்களுடைய பேச்சை நம்பி எந்த ஒரு வேலையையும் நீங்கள் செய்யக்கூடாது. சில பேருக்கு சொத்து சுகம் வாங்கக் கூடிய யோகம் இருக்கும். அதனால் சுப செலவுகள் ஏற்படும். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.

    கையில் இருக்கும் பணத்தை சேமிக்க பாருங்கள். வாகனத்தை ஓட்டும் போது ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். எதிரிகளோடு முட்டி மோதி போராடாதீர்கள்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி கொஞ்சம் கடன் பிரச்சனையை கொடுக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்துக்கு போராட வேண்டியதாக இருக்கும். மற்றபடி வேலையில் முன்னேற்றம் தொழிலில் முன்னேற்றத்தை குரு பகவான் உங்களுக்கு கொடுக்க போகின்றார்.

    சொந்த தொழில் செய்பவர்கள் முதலீட்டில் கவனம் செலுத்த வேண்டும். கடனுக்கு வியாபாரம் செய்யக்கூடாது. குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் அக்கரை எடுத்துக் கொள்ளுங்கள்.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு ஒருமுறை முயற்சி செய்தால் வெற்றி கிடைக்காது. முட்டி மோதி போராடி, உரண்டு பிரண்டு எழுந்த பிறகுதான் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இதனாலே சோர்ந்து போய் விடுவீர்கள். பணம் வீண் விரைய செலவு ஆகுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ரொம்ப ரொம்ப உஷாரா இருங்க. உங்களுடைய பெயரில் நகை அடமானம் வைப்பது, கடன் வாங்குவது, போன்ற வேலைகளை செய்யாதீங்க.

    ஆனால் எத்தனை பிரச்சனை வந்தாலும் இறுதியில் உங்களுக்கு தான் வெற்றி. குரு பகவான் ஆதரவாக இருப்பார் கவலைப்படாதீங்க.

    பொதுவான பரிகாரம்

    மேலே குறிப்பிடப்பட்டுள்ள ஏழு ராசிகளும் வாரம் தோறும் தவறாமல் வியாழக்கிழமை அன்று குருபகவானை வழிபாடு செய்ய வேண்டும். குரு பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வையுங்கள். மஞ்சள் நிற பூக்கள், முல்லை பூக்களை கொண்டு குருவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். கொண்ட கடலை மாலை கட்டி போடுங்கள். ஏழை எளியவர்களுக்கு உங்களால் முடிந்த அன்னதானத்தை செய்யுங்கள்.

    இந்த குரு பெயர்ச்சியின் போது உங்க வீட்டு பக்கத்தில் இருக்கும் கோவில்களில் பரிகார பூஜைகள் நடக்கும். அதில் கலந்து கொள்ளுங்கள். உங்கள் பெயர் ராசி நட்சத்திரம் சொல்லி அர்ச்சனையும் செய்து கொள்ளுங்கள். குரு பகவான் உங்களுக்கு நல்லதை மட்டுமே கொடுப்பார்.

    ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் படி தொகுக்கப்பட்ட பலன்களாகும். உங்கள் உங்கள் சுய ஜாதக அடிப்படையில் துல்லியமான பலன்களை அறிந்து கொள்ளுங்கள்.

    ஜோதிட நம்பிக்கை உள்ளவர்கள் இதனை பின்பற்றுங்கள்.

    Leave A Comment