• Login / Register
  • ராசி பலன்கள்

    இந்த மாதம் எப்படி இருக்கு? சித்திரை மாத ராசிபலன்கள்!

    பிறந்துள்ள சித்திரை மாதத்தில் 12 ராசியினருக்குமான பொதுப் பலன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    அந்த வகையில், தனுசு - மீனம் வரையான நான்கு ராசியினருக்கும் சித்திரை மாத பலன்கள் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்கலாம்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது என்றாலும் செலவுகளை சமாளிக்கும் அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். சுபகாரியத் தடை விலகும். வீடு மனை வாங்கும் யோகம் உண்டாகும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்தி பொறுப்புடன் செய்வதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். இருப்பினும் தொழில் ரீதியாக மேற்கொள்ளும் முயற்சிகளை உரிய நபர்களிடம் ஆலோசனை செய்த பிறகு மேற்கொண்டால் நல்ல பலனை பெற முடியும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் புதிய வாய்ப்புகள் தேடி வரும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். இருப்பினும் வாக்குவாதங்களில் ஈடுபடும் பொழுது பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். திறமைக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என்று நினைப்பவர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாக திகழப்போகிறது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். புதிய ஒப்பந்தங்கள் கைகூடும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு முருகப் பெருமானை வழிபட வேண்டும்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிக்கனத்தை கடைபிடிக்கும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அதிக அளவில் செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். வீண்விரயங்கள் தவிர்த்துக் கொள்வது நல்லது. கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் உண்டாகும். கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். வேலையை திறம்பட செய்வதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெற்று சலுகைகளும் பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். எவ்வளவு முயற்சியை மேற்கொள்கிறீர்களோ அந்த அளவிற்கு பலனை அடைய முடியும். வீண் அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாமர்த்தியமாக செயலாற்ற வேண்டிய மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படுவது சற்று சிரமமாகவே இருக்கும். மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அதை நல்ல முறையில் செய்வதன் மூலம் புதிய பொறுப்புகள் கிடைக்கும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழில் ரீதியாக வாங்கிய கடனை அடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சீதா ராமரை வழிபட வேண்டும்.

    Leave A Comment