• Login / Register
  • மேலும்

    கோட்டக் மஹிந்திரா வங்கியின் சில சேவைகளுக்கு ரிசர்வ் வங்கி தடை: காரணம் என்ன?

    நாட்டின் 5-வது பெரிய தனியார் வங்கியாக செயல்பட்டு வரும்  கோட்டக் மஹிந்திரா  வங்கியின் சில சேவைகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி இன்று(24) தடை விதித்துள்ளது.

    இந்த வங்கியின் இணைய சேவை பாதுகாப்பு குறித்து நடந்திய ஆய்வில் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் ரிசர்வ் வங்கியின் விதிகளை கடைபிடிக்க தவறியதால் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, கோட்டக் மஹிந்திரா வங்கியின் இணையதளம் மற்றும் மொபைல் பேங்கிங் வாயிலாக புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும், புதிய கிரெடிட் கார்டுகளை வழங்குவதற்கும் தடை விதித்து, அந்த சேவைகளை உடனடியாக நிறுத்த ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மறுஉத்தரவு வரும் வரை இந்த தடை அமலில் இருக்கும் என்றும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.



    Leave A Comment