• Login / Register
  • செய்திகள்

    இன்று பி.ப. 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை!

    இலங்கையின் வடக்கு, கிழக்கு உள்ளிட்ட மாகாணங்களில் இன்று வெயில் அதிகரித்து காணப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 02.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக எதிர்வுகூறப்பட்டுள்ளது.

    மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் பரவலாக மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

    வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

    புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரை காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

    மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படக்கூடும்.

    இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்தை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், பொது மக்களிடம் கோரியுள்ளது.

    GCE OL பரீட்சார்த்திகளுக்கான அறிவுறுத்தல்..

    பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்கள் கடும் வெப்பமான இந்த நாட்களில் பரீட்சை நிலையங்களுக்கு தயாராக வருமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரியுள்ளது.

    குறிப்பாக, முடிந்த அளவு தண்ணீர் அருந்துமாறும், பரீட்சை நிலையங்களில் தங்களுடைய இடத்தில் கடுமையான வெயில் படும் இடம் இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அவசர தொலைபேசி இலக்கம் அறிவிப்பு

    2023ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று (06) திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின்ற நிலையில் சீரற்ற வானிலை மற்றும் மழையுடன் கூடிய அவசர நிலைமைகள் ஏற்பட்டால், தேவையான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாகவும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

    மழை காரணமாக மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டால், '117' என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைக்க முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment