• Login / Register
  • சினிமா

    கார் விபத்து; பிரபல நடிகை மரணம் - கணவரின் அதிர்ச்சி தகவல்!

    பிரபல கன்னட மற்றும் தெலுங்கு சின்னத்திரை நடிகை பவித்ரா ஜெயராம் (வயது-35) வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ள நிலையில் அவரது மரணத்திற்கான காரணம் தொடர்பில் கணவர் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளார்.

    தனது குடும்பத்தினருடன் கடந்த ஞாயிற்றுக்கிழமை (12) சுற்றுலா சென்ற போது பவித்ரா ஜெயராம் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

    பவித்ரா ஜெயராமின் வாகன சாரதிக்கு வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனமையால் அவர்கள் பயணித்த மகிழுந்து, பேருந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

    இதில் பவித்ரா ஜெயராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

    இந்நிலையில், பவித்ராவின் மரணத்திற்கு விபத்து காரணமல்ல என்ற அதிர்ச்சி தகவலை அவரது கணவன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவரது கணவர் கூறிய போது...

    "பெங்களூரில் இருந்து நாங்கள் ஹைதராபாத் சென்று கொண்டிருந்த போது முன்பு முன்னே சென்று கொண்டிருந்த பேருந்தை நாங்கள் பயணித்த கார் ஓட்டுனர் முந்த முயன்றார். அப்போது திடீரென பேருந்து மீது உரசியதால் கார் ஓட்டுனர் அதிர்ச்சி அடைந்து காரை திருப்பினார். அப்போது எதிரே வந்த பேருந்துடன் மோதியதால் விபத்து ஏற்பட்டது.
     
    இந்த விபத்தில் டிரைவர் உள்பட யாருக்கும் பெரிய அளவில் காயமில்லை, பவித்ரா ஜெயராமனுக்கும் சிறிய காயம் தான் ஏற்பட்டது. ஆனால் என்னுடைய தலையில் காயம் ஏற்பட்டதை பார்த்து பவித்ரா அதிர்ச்சி அடைந்தார், அந்த அதிர்ச்சியில் அவருக்கு ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக தான் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கிறது" என்று கூறினார்.

    "எனக்கும் பெரிய அளவில் காயம் இல்லை, ஆனால் என்னுடைய தலையில் ஏற்பட்ட ரத்தத்தை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்ததால் தான் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் ஏற்பட்டதாக மருத்துவர்களும் கூறியுள்ளனர்" என்று பேட்டி அளித்துள்ளார்.

    இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Leave A Comment