• Login / Register
  • சினிமா

    புதிய வடிவில் ஹாரி பாட்டர்: ரசிகர்கள் மகிழ்ச்சி

    உலகளவில் பெருமளவில் ரசிகர்களை  பாதித்த புனைவு கதாபாத்திரங்களில் முதன்மையானது ஹாரி பாட்டர்.

    எழுத்தாளர் ஜே.கே.ரெளலிங்கின் ஹாரி பாட்டர் உலகை மையப்படுத்திய 7 புத்தகங்களும் ஒலி வடிவச் சித்திரங்களாக மாற்றப்படவுள்ளன.

    அமேசான் நிறுவனத்தின் ஆடிபிள் மற்றும் பாட்டர்மோர் பப்ளிஷிங் இணைந்து தயாரிக்கவுள்ள இந்த ஒலிச்சித்திரத் தொடர் 2025-ம் ஆண்டு இறுதியில் வெளியாகவுள்ளது.

    100-க்கும் அதிகமான நடிகர்களின் குரல்கள் வழியாக துல்லியமான ஒலியமைப்பு, இசை உடன் ஹாரி பாட்டர் கதைகள் ஒலிவடிவில் ஆங்கிலத்தில் தயாரிக்கப்படவுள்ளன.

    ஆங்கிலத்தில் 1999-ல் முதன்முதலாக ஹாரி பாட்டர் புத்தகம் ஒலிவடிவில் உருவாக்கப்பட்டது. ஒரு குரல் ஒலிப்புத்தகமாக அது உருவானது.

    2015-ல் ஆடிபிள் அதனை தனது தளத்தில் வெளியிட்டது. அதுமுதல் 1.4 பில்லியனுக்கும் அதிகமான மணி நேரங்கள் அந்த ஒலிப்புத்தகம் கேட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.   


    Leave A Comment