• Login / Register
  • செய்திகள்

    உலகின் உயரமான கட்டிடத்தில் ஒளிரும் நாம் தமிழர் கட்சி சின்னம்!

    "அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம்" என்ற தத்துவார்த்த முழக்கத்தை முன்வைத்து அரசியல் புரட்சி செய்து வரும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவாக உலகின் மிக உயரமாக கட்டிடத்தில் அக்கட்சியின் "ஒலிவாங்கி (மைக்)" சின்னத்தை ஒளிர செய்து பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

    50 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட திராவிட கட்சிகளையும், தேசிய கட்சிகளையும் அச்சத்திற்குள்ளாக்கும் வகையில் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி வளர்ந்து வருகின்றமை அரசயில் அவதானிகளின் ஆணித்தரமான கருத்தாக உள்ளது.

    2010 ஆம் ஆண்டு அரசியில் பயணத்தை தொடங்கிய நாம் தமிழர் கட்சி 14 ஆவது ஆண்டிலும் தனித்தே களம்காண்கிறது. வெறுமனே வாய்ச்சொல் அரசியலாக அல்லாது செயல் அரசியலாக மாற்றத்திற்கான அரசியல் பயணத்தை தொடர்ந்து வரும் நாம் தமிழர் கட்சிக்கு மக்கள் ஆதரவு வெகுவாக அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் மக்களவைத் தேர்தல் நெருங்கிய சமயத்தில் கரும்பு விவசாயி சினத்ததை முடக்கி தேர்தல் ஆணையம் மூலம் மத்திய அரசு நெருக்கடியை ஏற்படுத்தியது.

    இறுதி நேரத்தில் "ஒலிவாங்கி (மைக்)" சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

    இரட்டை மெழுகுவர்த்தி, கரும்பு விவசாயி சின்னம் போன்றே ஒலிவாங்கி சின்னமும் நாம் தமிழர் கட்சிக்குரிய சின்னமாக ஒதுக்கப்பட்டதன் பிற்பாடு பிரபல்யமாகி வருகிறது.

    நாம் தமிழர் கட்சியின் சமூக வலைத்தள பிரிவு வலிமையான பிரச்சார ஊடகமாக அதிதீவிரமாக செயற்பட்டு கடந்த சின்னங்களை போன்று ஒலிவாங்கி சின்னத்தையும் குறுகிய காலத்தில் மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் பெரு வெற்றி பெற்றுள்ளனர்.

    ஏனைய கட்சிகளின் பிரச்சார நடவடிக்கை தமிழ்நாடு மற்றும் இந்திய அளவில் வரையறுக்கப்பட்டு காணப்படும் நிலையில் நாம் தமிழர் கட்சியின் தேர்தல் பரப்புரையானது உலகளாவியதாக கவனம் பெற்று வருகின்றது.

    இந்நிலையில், டுபாய் - அமீரகத்தில் உள்ள உலகிலேயே உயரமான கட்டிடத்தில் நாம் தமிழர் கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஒளிரவிடப்பட்டு பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அமீரக நாம் தமிழர் உறவுகளின் ஏற்பாட்டில் அமீரகத்தில் உள்ள உலகின் உயரமான புர்ஜ் கலிஃபா கட்டிடத்தில் சீமானின் சின்னம் என்ற எழுத்துகளுடன் நாம் தமிழர் கட்சியின் பெயர் புலிக்கொடியுடனும் ஒலிவாங்கி சின்னமும் ஒளிரச் செய்யப்பட்டு உலகத் தமிழர்களிடம் சின்னம் தொடர்பான பரப்புரையினை மேற்கொண்டுள்ளமை மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.

    முன்னதாக லண்டன் பாராளுமன்ற கட்டிடத்திற்கு முன்பாக ஒலிவாங்கி(மைக்) சின்னம் காட்சிப்படுத்தப்பட்டு பரப்புரை முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

    "தடை அதை உடை புது சரித்திரம் படை" என்ற புரட்சிகர வாக்கியத்திற்கு அமைவாக தடைகளை கண்டு துவண்டுவிடாது தடைக்கற்களையும் படிக்கற்களாக்கி நாம் தமிழர் கட்சி முன்னேறி வருகின்றமை மாற்று அரசியல் மீதான் நம்பிக்கையை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment