• Login / Register
  • செய்திகள்

    விஜயின் முதல் அரசியல் மாநாடு மதுரையில் - வெளியான தகவல்!

    தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு மதுரையில் நடத்தப்பட உள்ளதான தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகர் விஜய்யை சுற்றி அரசியில் பிரவேச எதிர்பார்ப்பு கடந்த பல வருடங்களாக கட்டமைக்கப்பட்டிருந்த நிலையில் அதனை வலுப்படுத்தும் வகையில் அவரது திரைப்படங்களில் காட்சி அமைப்புகளும் வசன அமைப்புகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் அவரது ரசிகர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதுடன் அரசியில் அரங்கிலும் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியே வந்திருந்தது.

    இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாதம் நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை அறிவித்தார். விஜய் மக்கள் இயக்கம் தமிழக வெற்றி கழகமாக மாற்றப்பட்டு உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட கட்சி பணிகள் மாநிலம் தழுவியதாக தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

    முன்னதாக ஒத்துக்கொண்ட திரைப்பட பணிகளை முடித்து கொடுத்த பின்னர் விரைவில் முழுநேர அரசியலுக்கு திரும்புவதுடன் 2026 சட்டமன்ற தேர்தலில் களமிறங்கப் போவதாகவும் விஜய் அறிவித்திருந்தார்.

    தற்போது, 19 ஆவது இந்திய மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் தமிழ்நாட்டில் ஒரேகட்டமாக நடைபெற்று முடிந்துள்ளது. தேர்தல் முடிவுகள் ஜூன் 04 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.

    அதன் பின்னர் தமிழக வெற்றி கழகத்தின் கட்சிப் பணிகளை விறுவிறுப்பாக தொடங்க இருக்கின்றனர். இந்நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாடு தொடர்பான எதிர்பார்ப்பு அக்கட்சியின் தொண்டர்கள் மற்றும் அரசியல் தரப்பினரிடம் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

    தவெகவின் முதல் அரசியல் மாநாடு மதுரையில் நடத்தபட உள்ளதான தகவல் முன்கூட்டியே வெளியாகியிருந்தது.

    இந்நிலையில் தான் குறித்த முதல் அரசியில் மாநாடு எப்போது என்பது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

    நடிகரும் தமிழன வெற்றி கழகத்தின் தலைவருமான விஜயின் பிறந்தநாள் ஜூன் மாதம் 22-ம் திகதி வருகிறது. அதற்கு முன்பே தேர்தல் முடிவும் அறிவிக்கப்பட்டு விடும் என்பதால் தன்னுடைய பிறந்தநாளின் போதே சென்டிமென்ட்டாக கட்சியின் முதல் மாநாட்டினை மதுரையில் நடத்த முடிவு செய்திருக்கிறார் விஜய். இதுகுறித்தான அறிவிப்பும் சீக்கிரம் வரும் என்கிறார்கள்.

    பல அரசியல் தலைவர்களுக்கு அடித்தளமிட்டுக் கொடுத்த மதுரை மாவட்டம் தன்னுடைய அரசியல் பயணத்திற்கும் தொடக்கமாக இருக்க வேண்டும் என்று கருதியிருக்கிறார் விஜய்.

    படவிழாக்களில் விஜயின் குட்டி ஸ்டோரிக்கே அவரது ரசிகர்கள் தவமாய் காத்திருப்பார்கள்.

    இப்போது அரசியல் களத்தில் தங்கள் தலைவரின் முதல் மாநாடு எப்படி இருக்கப் போகிறது, அதில் அவர் என்ன பேசப் போகிறார் என்று தங்கள் ஆவலை இப்போதே இணையத்தில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

    Leave A Comment