• Login / Register
 • ராசி பலன்கள்

  இன்றைய நாள் எப்படி? 20 மே 2024!

  திங்கள்கிழமை

  20 - 05 – 2024
  குரோதி ஆண்டு – வைகாசி – 07 ஆம் தேதி

  மேஷம்:

  மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் கேட்ட வரம் இல்லாமல், கேட்காத வரத்தை எல்லாம் அந்த கடவுள் கொடுக்கப் போகின்றான் சந்தோஷத்தில் தலைகால் புரியாது. யோகக்காரன் என்று சொல்லுவார்கள் அல்லவா. அந்த பட்டம் உங்களுக்கு கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். அனாவசியமாக அடுத்தவர்களை குறை கூறும் பழக்கத்தை நிறுத்தி விடுங்கள்.

  ரிஷபம்:

  ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று தற்பெருமை அதிகமாக இருக்கும். என்னவோ தெரியல உங்களை பற்றி நீங்களே உயர்த்தி பேசிக்க போறீங்க. இதனால் உங்களை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் உங்களைப் பற்றி பின்னால் பேசுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. தற்புகழ்ச்சியை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். வேலையில் கவனம் செலுத்துங்கள். ஆடம்பர செலவு வேண்டாம்.

  மிதுனம்:

  மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நன்மை நடக்கக்கூடிய நாளாக இருக்கும். எந்த பிரச்சனையும் பெருசாக இருக்காது. அந்தந்த வேலைகள் அந்தந்த நேரத்தில் சரியாக நடந்து முடியும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். இருந்தாலும் இந்த நாள் இறுதியில் அதெல்லாம் சரியாகிவிடும். கணவன் மனைவிக்குள் வாக்குவாதம் வேண்டாம் யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து நடக்க வேண்டும்.

  கடகம்:

  கடக ராசிக்காரர்களுக்கு இன்று சிக்கல்கள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எந்த வேலையை எப்படி செய்வது, எந்த முடிவை எப்படி எடுப்பது என்று தெரியாமல் கொஞ்சம் குழப்பமாக இருப்பீர்கள். ரொம்ப முக்கியமான விஷயங்களை நடப்பதற்கு முன்பு வெளியில் சொல்வதை குறைத்துக் கொள்ளுங்கள். உங்களால் ஆர்வத்தை அடக்க முடியவில்லை இருந்தாலும் அடுத்தவர்களுக்கு உண்மையாக இருப்பதாக நினைத்துக் கொண்டு எல்லா விஷயத்தையும் உளறி வைக்கும் பழக்கத்தை குறைப்பது முன்னேற்றத்திற்கு நன்மை வகுக்கும்.

  சிம்மம்:

  சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சிரமங்கள் அதிகமாக இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. உடல் அசதி இருக்கும். அலுவலகத்தில் உங்களுடைய பணியை சரிவர செய்ய முடியாது. இதனால் மேல் அதிகாரிகளிடம் திட்டு வாங்குவீர்கள். தொழிலில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம் முதலீட்டில் சிக்கல் இருக்கலாம். இன்று கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்.

  கன்னி:

  கன்னி ராசிக்காரர்களை இன்று சுற்றி இருப்பவர்கள் நிம்மதியாக இருக்க விடமாட்டார்கள். நண்பர்கள் உறவினர்கள் எல்லாம் தொல்லையாக இருக்கும். மேனேஜர் தொல்லை மனைவி தொல்லை பிள்ளைக்குட்டிகள் தொல்லை என்று உங்களுடைய வாழ்க்கை இன்று சோக கடலில் மூழ்கி இருக்கும். பிரச்சனை கிடையாது. இறைவன் அருள் ஆசியால் இந்த நாள் இறுதியில் எல்லாம் சரியாகிவிடும். பிரச்சனைகளை சமாளிக்கும் தெம்பை காலையிலேயே வர வைத்துக் கொள்ளுங்கள்.

  துலாம்:

  துலாம் ராசிக்காரர்கள் இன்று நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். அடுத்தவர் விஷயத்தை திரும்பி கூட பார்க்க மாட்டீர்கள். இதனால் உங்களுடைய நிம்மதி இன்று இரண்டு மடங்கு அதிகரிக்கும். அப்படி என்றால் தினமும் நீங்கள் இப்படி இருப்பது நல்லது. அடுத்தவர்கள் விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் இருந்தாலே நாம அதிர்ஷ்டசாலிகள் தான். குடும்ப ஒற்றுமையில் சிக்கல்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. வார்த்தைகளில் கவனம் தேவை.

  விருச்சிகம்:

  விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா வேலையையும் சரியான நேரத்தில் நடந்து முடியும். திறமைகள் வெளிப்படும். மாணவர்களுக்கு கல்வியில் இருக்கக்கூடிய புதிய முயற்சிகள் வெற்றி அடையும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். முதலீடு செய்யலாம் வங்கி கடன் கிடைக்கும். நீண்ட தூர பயணம் வெற்றியை கொடுக்கும்.

  தனுசு:

  தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. பெருசாக எந்த ஒரு வேலையையும் பிளான் செய்யாதீங்க. அன்றாட வேலையை மட்டும் கூடுதல் கவனத்தோடு செய்தால் போதும். நல்லது நடக்கிறதே என்று கொஞ்சம் காலை ஒரு படி மேலே வைத்தால், இரண்டு படி சறுக்கும். இரண்டு படி சறுக்கி விட்டதே என்று அமைதியாக இருந்தால், எதிர்பாராத நல்லது நடக்கும். இந்த அனுபவம் உங்களுக்கு வாழ்க்கை பாடத்தை கற்றுக் கொடுக்கும்.

  மகரம்:

  மகர ராசிக்காரர்களுக்கு இன்று மனசு தேவையற்ற சஞ்சலத்தில் ஈடுபடும். அடுத்தவர்களை பார்த்தே உங்களுடைய வாழ்க்கையை வாழுவீர்கள். பேராசை பெரு நஷ்டத்தை உண்டாக்கிவிடும். நிம்மதியை கெடுத்து விடும். ஜாக்கிரதையாக இருங்கள். உங்களுக்கு என்ன தேவையோ அதை மட்டும் பூர்த்தி செய்து கொள்ளுங்கள் அடுத்தவர்களை ஒப்பிட்டு எக்காரணத்தைக் கொண்டும் எதுவும் பேசாதீங்க அது சிக்கலில் கொண்டு போய் நிறுத்தி விடும்.

  கும்பம்:

  கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி மேல் வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். சில பேருக்கு வேலையில் மாற்றம் இருக்கும். முன்னேற்றத்தோடு கிடைக்கக்கூடிய மாற்றம்தான். தாராளமாக ஏற்றுக் கொள்ளுங்கள். குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும். சந்தோஷம் இரட்டிப்பாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். நீண்ட தூர பயணத்தின் போது கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும்.

  மீனம்:

  மீன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத அதிர்ஷ்டம் காத்துக் கொண்டிருக்கிறது. வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளிடம் நல்ல பெயர் கிடைக்கும். நீண்ட நாட்களாக பிரச்சனையை சிக்கி வந்த நீங்கள் நிம்மதியான நிலையை அடைவீர்கள். நிதி நிலைமை சீராக இருக்கும். பிரச்சனைகளுக்கு ஓய்வு கிடைக்கும். நண்பர்கள் உறவினர்களுக்குள் நல்ல ஒற்றுமை இருக்கும்.

  Leave A Comment