• Login / Register
  • முகப்பு

    பாலியல் குற்றவாளிக்கு மரண தண்டனை; கேரள உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

    தலித் மாணவி ஒருவரை பாலியல் வன்புனர்வுக்குள்ளாக்கி படுகொலை செய்த குற்றவாளிக்கு வழங்கப்பட்டிருந்த மரண தண்டனை தீர்ப்பை உறுதி செய்து கேரள உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    2016 ஆம் ஆண்டு நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் 8 ஆண்டுகளின் பின்னர் குற்றவாளிக்கு மரண தண்டனை தீர்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

    கேரளத்தின் எர்ணாகுளம் மாவட்டத்தின் பெரும்பாவூர் குருப்பம்பாடி பகுதியில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் 28-ஆம் தேதி, தலித் சமூகப் பிரிவைச் சேர்ந்த சட்டப்படிப்பு மாணவி ஜிஷா (வயது-29) என்பவர் அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த அமீருல் இஸ்லாம் என்பவரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதுடன், படுகொலை செய்யப்பட்டார்.

    தந்தையில்லாத நிலையில், தாயும் மனநலம் சரியில்லாத இல்லாத காரணத்தினால் குறித்த மாணவியின் படுகொலை தொடர்பான விசாரணையில் தொய்வு ஏற்பட்டிருந்தது.

    இந்நிலையில், பிரேதப் பரிசோதனையில் 'பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டது’ தெரியவந்தது.

    குறித்த பிரேத பரிசோதனை அறிக்கையில், அவரது உடலில் 35க்கும் மேற்பட்ட இடங்களில் காயங்கள் பதிவாகியிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இதையடுத்து குற்றவாளியை தீவிரமாகத் தேடி வந்த காவல்துறை, தமிழ்நாட்டில் பதுங்கியிருந்த அவரை ஜூன் மாதம் 14-ஆம் தேதி கைது செய்தனர். அவாரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பரில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

    எர்ணாகுளம் முதன்மை நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், கைதான நபர் குற்றஞ்செய்திருப்பது தகுந்த சாட்சியங்களுடன் நிரூபனமாகியுள்ளதால் அவருக்கு மரண தண்டனை விதித்து கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பரில் தீர்ப்பளித்திருந்தது.

    இந்த நிலையில், இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த நபர் கேரள உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். தன் மீது போலியான சாட்சியங்களை கேரள காவல்துறையினர் உருவாக்கி தன்னை குற்றவாளியாக சித்தரித்திருப்பதாக அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

    அவரது மேல்முறையீட்டு மனுவை இன்று(மே 20) விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உயர்நீமன்றம், குற்றவாளியின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ததுடன், கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.

    2016ஆம் ஆண்டு நடந்த இச்சம்பவத்திற்கு 8 ஆண்டுகள் கழித்து தீர்ப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment