• Login / Register
  • ஆன்மிகம்

    வாழ்வை நெறிப்படுத்தும் தவக்காலம் ஆரம்பம்!

    இயேசுக் கிறிஸ்து உயிர்ப்பு நாளுக்கு முந்தைய நாற்பது நாள்கள் கிறிஸ்தவர்களால் தவக் காலமாக அனுசரிக்கப்படுகிறது. அதன்படி உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் 40 நாள் தவக்காலம் சாம்பல் புதன் இன்று துவங்கியது.

    தவக்காலம் முழுவதும் ஒவ்வொரு நாளும் காலை அல்லது மாலை வேளைகளில் நடைபெறும் வழிபாடுகளில் கிறிஸ்தவர்கள் பங்கேற்க வேண்டும். தவக்காலத்தின் இறுதி வாரம் வரும் ஏப்ரல் மாதம் முதல் துவங்குகிறது. அப்போது சிலுவைப் பாதை எனப்படும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

    அப்போது மதுப்பழக்கம், புகைப்பிடித்தல் உள்ளிட்ட தீயப் பழக்கங்களில் இருந்து விடுவித்துக்கொள்ள தவக்காலம் உதவியாக இருக்கும். இந்நிலையில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முந்தைய நாளாக புனித வியாழன் கடைப்பிடிக்கப்படுகிறது.

    தவக்காலத்தில் பெரும்பாலான கிறிஸ்தவர்கள் அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார்கள். மேலும், வீடுகளில் திருமணம், பிறந்தநாள் விழா போன்ற நிகழ்ச்சிகளையும், கொண்டாட்டங்களையும் தவிர்த்து விடுவது வழக்கம். இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவுகூரும் வகையில் கத்தோலிக்க தேவாலயங்களில் வெள்ளிக்கிழமைதோறும் சிலுவைப்பாதை வழிபாடு நடைபெறும். தவக்காலத்தில் ஏழைகளுக்கு உணவு அளிப்பது, தர்ம காரியங்கள் செய்வது என பல்வேறு நற்செயல்களிலும் ஈடுபடுவார்கள்.

    தவக்காலத்தில் ‘நானும் கடவுளும் என்ற இரட்டை பரிமாண அணுகுமுறையை கடந்து, கடவுள், சமூகம், நான்’ என்ற முப்பரிமாணத்தில் பயணம் செய்தால் இந்த வசந்தத்தின் பயனை மானுடம் அனுபவிக்க முடியும்.

    இலையுதிர் காலத்தில் திடீரென்று ஒரே சாரல் மழை. பூமி நனைகிறது. மண் மணக்கிறது, தளிர்கள் அரும்புகின்றன. மரங்கள் பசுமை போர்த்துகின்றன. பூக்கள் மலர்ந்து வசந்தத்தை அறிவிக்கின்றன. மனம் குளிர்ந்து போகிறது. ஒரே ஒரு மழையால் எத்தனை நன்மைகள். அவ்வாறே, தவக்காலம் என்பது ஆன்மாவின் வசந்த காலம். மனிதர்களுக்கு பல நன்மைகள் தருகின்ற காலம்.

    இக்காலத்தில் ‘நானும் கடவுளும் என்ற இரட்டை பரிமாண அணுகுமுறையை கடந்து, கடவுள், சமூகம், நான்’ என்ற முப்பரிமாணத்தில் பயணம் செய்தால் இந்த வசந்தத்தின் பயனை மானுடம் அனுபவிக்க முடியும்.

    இயேசு கற்றுத்தந்த ‘விண்ணுலகில் இருக்கின்ற எங்கள் தந்தையே’ என்ற வேண்டலை (மத்தேயு 6:9-13) நினைவில் கொள்வோம். இந்த வேண்டலில், எங்கள் தந்தையே எங்களுக்கு தாரும், எங்களுக்கு எதிராக, நாங்கள் மன்னித்தது போல, எங்கள் குற்றங்களை, எங்களை சோதனைக்கு என ஆறு இடங்களில் சமூகத்தை உள்ளடக்கும் பன்மைச்சொற்கள் அமைந்துள்ளன. ஒவ்வொரு தனி மனிதரும் சமூகத்தின் அங்கம் என்றும், அனைவரும் இறைவனின் மக்கள் என்றும் முப்பரிமாணத்தை இயேசு இந்த வேண்டலில் நினைவு படுத்துகின்றார்.



    Leave A Comment