• Login / Register
 • கட்டுரைகள்

  விடுதலைக்கு விதையான முஸ்லிம் மாவீரர்களின் விபரம்!

  தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற இலட்சி வேட்கையுடன் இணைந்த வடகிழக்கு தமிழர் தாயக விடுதலைக்குகாக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தில் தம்மையும் இணைத்து போராடி முஸ்லிம்கள் பலரும் மாவீரர்களாகியுள்ளனர்.

  1990 ஆம் ஆண்டு யாழ் மாவட்டத்தில் இருந்து முஸ்லிம்களை வெளியேற்றி சம்பவம் உள்ளிட்டவைகளை முன்னிறுத்தி தமிழ் பேசும் சமூகமாக ஒன்றிணைந்து சிங்கள பௌத்த பேரினவாத அடக்குமுறைக்கு எதிராக போராடிய வரலாறு இன்று இருட்டடிப்பு செய்யப்பட்டு இரு இனங்களும் துருவமயப்படுத்தப்பட்டுள்ளது.

  இலங்கையில் வாழும் தமிழ் பேசும் சமூகங்களான ஈழத் தமிழர்கள், முஸ்லிம்கள், மலையகத் தமிழர்கள் இடையே உள்ளார்நத ரீதியாக பாரிய பிளவு நிலை கட்டியெழுப்பப்பட்டு வருகிறது.

  மேலோட்டமாக பார்க்கையில் சிநேகபூர்வமான உறவு நிலை காணப்படுவது போன்று காணப்படினும் தமிழ் பேசும் சமூகமாக ஒன்றுபட்டு உரிமைகளை வென்றெடுத்து இருப்பை பாதுகாக்கும் அரசியல் போராட்டத்தில் பாரிய பிளவு நிலையே காணப்பட்டு வருகிறது.

  அரசியல் போராட்டத்தில் தமிழ் பேசும் சமூகத்தின் விடுதலைக்காக கொள்ளை ரீதியாக ஒன்றுபட முடியாத இன்றைய நிலையுடன் ஆயுதப்போராட்ட காலத்தை திரும்பிப்பார்க்கையில் மாறுபாடான நிலை காணப்பட்டிருந்தது.

  ஒவ்வொரு தரப்பினரும் தனித் தனியேயான அரசியல் இலக்கில் பயணப்பட்டு வரும் நிலையில்கூட பொது கொள்கை அடிப்படையில் இணைந்து செயற்பட முடியாத நிலை இன்றளவும் நீடித்தே வருகிறது.

  இருந்த போதிலும், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற இலட்சியத்தை முன்னிறுத்தி தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட ஆயுதப் போராட்டத்தில் தம்மையும் இணைத்து போராடியதோடு தமிழின விடுதலைக்காக தம்முயிரை ஈகம் செய்து வரலாற்றில் மலையகத் தமிழர்கள் மற்றும் முஸ்லிம் இளைஞர்களுக்கும் பங்கேற்றிருந்தமை வரலாறாகும்.

  தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம் இளைஞர்களது பங்கேற்பு இருந்துள்ளதன் அழிக்கமுடியாத சாட்சியமாக முஸ்லிம் இளைஞர்கள் பலர் மாவீரர்களாகி வரலாறாகியுள்ளனர்.

  தமிழீழ விடுதலைப் புலிகளின் முதல் முஸ்லிம் மாவீரன் லெப் ஜுனைதீன் (ஜோன்சன்)

  தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் முஸ்லிம்கள் ஆற்றிய பங்கு மிகவும் காத்திரமானது. தென் தமிழீழத்தில் உருவாகிய இயக்கங்களுள் “தமிழீழ விடுதலை நாகங்கள்” (நாகபடை) சிலகாலம் பரபரப்பை உருவாக்கியது. இதற்கு தலைமை தாங்கியவர் ஒட்டமாவடியை சேர்ந்த ஜுனைதீன்.

  அரசுக்குத் துணைபோன பிரமுகர்கள் மீது மேற்கொண்ட சகல தாக்குதல் நடவடிக்கைகளிலும் பங்கு பற்றியவர் இவர் இக்குழுவுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக தொடர்ந்து இயங்க முடியாமல் போன நிலையில் தனது எதிர்கால பங்களிப்பைத் தமிழீழ விடுதலைப் புலிகள் மூலமாக வழங்க முடிவெடுத்தார்.

  ஜுனைதீன் இந்தியாவில் புலிகளின் மூன்றாவது பயிற்சி முகாமில் பொன்னம்மான், புலேந்திரன் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார் இக்காலத்தில் ஜோன்சன் எனும் பெயர் இவருக்கு சூட்டப்பட்டது. முகாமில் தனது தனி திறமைகளை அடிக்கடி வெளிப்படுத்தினார் ஓவியத்துறையிலும் இவருக்கு ஈடுபாடு இருந்தது. அவர் வரைந்திருந்த ஓவியங்களில் உப இயந்திரத் துப்பாக்கி எனும் படம் தேசியத்தலைவரின் கவனத்தை ஈர்த்தது.

  ஒரு ஆயுத போராட்ட குழுவை ஆரம்பித்து இன விடுதலைக்காக போராடியவர் என்ற வகையில் இவர் மீது தனிப்பற்று அவருக்கு இருந்தது. பிரபாகரனே தனது தலைவர் என்று ஏற்றுக்கொண்ட ஜூனைதீனுக்கு (ஜோன்சன்) அவருடனான சந்திப்புக்கள் மன நிறைவைக் கொடுத்தன. இச்சந்திப்புக்களில் விடுதலைப் போராட்ட வழிமுறைகள் பற்றியே அதிகம் கலந்துரையாடப்பட்டன. அதில் தமிழ் - முஸ்லிம் இனங்களின் உறவை பலப்படுத்த ஆற்ற வேண்டிய பணிகள் முக்கியத்துவம் பெற்றன.

  பயிற்சி முகாமிலிருந்து வெளிவந்ததும் யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்பட்டார். ஜுனைதீன் (ஜோன்சன்) கிட்டு தலைமையில் 1985 நடைபெற்ற யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத் தாக்குதலில் பங்கு பற்றி தனது ஆற்றலை நிரூபித்தார். 1985/02/13 நடைபெற்ற கொக்குளாய் இராணுவ முகாம் மீதான தாக்குதலிலும் பங்குபற்றி பின்னர் மட்டக்களப்புக்கு சென்றார். அங்கே புதிய பலத்துடன் களமாடும் கனவுகளோடு இருந்தார்.

  முஸ்லிம் – தமிழ் கலவரத்தின் போது மஞ்சந்தொடுவாய் பகுதியில் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்திய சில தமிழர்களை புலிகள் தோணிகளில் கொண்டுவந்து விசாரணை நடந்தினர். மறுதரப்பால் இவர்களும் பாதிப்புக்குள்ளானது தெரியவந்தது. இந்த விசாரணைகளை ஜுனைதீனும் (ஜோன்சன்) பார்த்துக்கொண்டிருந்தார்.
  விசாரித்துக் கொண்டிருந்த அப்போதைய மட்டக்களப்பு தலைமையை தனியே அழைத்து ”அவர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் நாங்கள் ஒரு தரப்புக்கு சாதகமாக நடந்து கொள்ளக்கூடாது பாதிப்பின் வலியும் வேதனையும் எல்லோருக்கும் ஒரே மாதிரித்தான் வேணுமெண்டா கடுமையா எச்சரிச்சுப் போட்டு அனுப்புங்கோ வேறு ஒன்றும் செய்யவேண்டாம்” என வலியுறுத்தினார்.

  இந்த நிதானமான வார்த்தைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன ஒரு பதட்டமான சூழ்நிலையிலும் இரு இனங்களின் ஐக்கியத்தையே முதன்மைப் படுத்தினார். அவர் 07 /05 /1985 கரடியனாற்றில் பொலிஸாருடன் மோத வேண்டிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. G3 துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே தப்பி வந்தார். இதே போல் ஈரளக்குளப்பகுதியில் அமைக்கப்படட பயிற்சி முகாமில் புதிதாக இயக்கத்தில் இணைந்து கொண்டோர் இருந்தனர். அந்தப்பகுதியை வட்டமிட்டு தாக்குதல் நடாத்திய உலங்கு வானுர்தியை கீழே இறங்கவிடாமல் G3 துப்பாக்கியால் சுட்டு விரட்டினார்.

  யுத்த நிறுத்த காலத்தில் ஜுனைதீனும் சக போராளி ஜோசெப்பும் கரடியனாற்றில் இருந்து ஆயித்தியமலைக்குச் சென்ற நேரம் பொலிஸார் கைதுசெய்து பனாகொடை இராணுவ முகாமுக்கு அனுப்பினர்.

  பின்னர் ஜுனைதீனும், ஜோசெப்பும் அங்கிருந்து தப்பிச் செல்ல வேண்டிய தேவை இருந்தது. சித்திரவதைகள் தொடர்ந்தால் பாதகமான நிலைமைகள் ஏற்படும் என உணந்தனர். 30/11/1985 அன்று படையினரைத் தாக்கிவிட்டு தப்பிச் செல்கையில் சுட்டுக்கொல்லப்பட்டு வீரகாவியமானார் ஜுனைதீன் மற்றும் ஜோசெப்.

  தமிழீழ விடுதலை போராட்டத்தில் களப்பலியான முதல் முஸ்லிம் மாவீரன் என வரலாற்றில் தனது பெயரைப் பதித்துக் கொண்டார் ஜுனைதீன்.

  முதல் பெண் முஸ்லிம் மாவீரர் - கடற்புலி லெப் கேணல் முல்லைமகள்

  முகைதீன் ஜெரீனா என்ற இயற்பெயரை கொண்ட கடற்புலி லெப் கேணல் முல்லைமகள் 19.06.2007 அன்று வீரச்சாவடைந்து முதல் பெண் முஸ்லிம் மாவீரர் என்ற வரலாற்றை பதிவு செய்திருந்தார்.

  தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனையினால் வெளியிடப்பட்டிருந்த மாவீரர் பட்டியலில் இடம்பெற்றிருந்த முஸ்லிம் மாவீரர்களது பெயர் விபரம்...

  01) லெப்டினன்ட் ஜோன்சன்
      இயக்கப் பெயர்: ஜோன்சன்
      இயற்பெயர்: ஜுனைதீன்
      ஊர்: ஓட்டமாவடி, மட்டக்களப்பு
      வீரச்சாவு: 30.11.1985
                                                              
  02) வீரவேங்கை லத்தீப்
      இயக்கப் பெயர்: லத்தீப்
      இயற்பெயர்: முகமது அலியார் முகமது லத்தீப்
      ஊர்: ஒல்லிக்குளம் காத்தான்குடி, மட்டக்களப்பு
      வீரச்சாவு: 24.12.1986
                                                            
  03) வீரவேங்கை நசீர்
      இயக்கப் பெயர்: நசீர்
      இயற்பெயர்: முகமட் நசீர்
      ஊர்: காங்கேயன்ஓடை
      வீரச்சாவு: 30.12.1987
                                                    
  04) வீரவேங்கை சாபீர்
      இயக்கப் பெயர்: சாபீர்
      இயற்பெயர்: சரிபுதீன் முகமட் சாபீர் 
      ஊர்: தியாவெட்டுவான், மட்டக்களப்பு
      வீரச்சாவு: 13.05.1988
                              
  05) வீரவேங்கை ஜெமில்
      இயக்கப் பெயர்: ஜெமில்
      இயற்பெயர்: ஜெயாத் முகமது உசைதீன்
      ஊர்: ஓட்டமாவடி, மட்டக்களப்பு
      வீரச்சாவு: 05.08.1989
                                                           
  06) வீரவேங்கை ஆதம்
      இயக்கப் பெயர்: ஆதம்
      இயற்பெயர்: எஸ்.எம்.ஆதம் பாவா
      ஊர்: சாய்ந்தமருது
      வீரச்சாவு: 03.01.1990
                     
  07) வீரவேங்கை அலெக்ஸ்
      இயக்கப் பெயர்: அலெக்ஸ்
      இயற்பெயர்: அகமட் றியாஸ்
      ஊர்: மருதமுனை, நீலாவணை, மட்டக்களப்பு
      வீரச்சாவு: 04.05.1990

  08) வீரவேங்கை கபூர்
      இயக்கப் பெயர்: கபூர்
      இயற்பெயர்: முகமது அலியார் முகமது சலீம்
      ஊர்: காங்கேயன்ஓடை, மட்டக்களப்பு
      வீரச்சாவு: 11.06.1990

  09) வீரவேங்கை தாகீர்
      இயக்கப் பெயர்: தாகீர்
      இயற்பெயர்: முகைதீன்பாவா அன்சார்
      ஊர்: திருகோணமடு, பொலனறுவை
      வீரச்சாவு: 11.06.1990

  10) லெப்டினன்ட் ஜெமில்
      இயக்கப் பெயர்: ஜெமில்
      இயற்பெயர்: கரீம் முஸ்தபா
      ஊர்: ஓட்டமாவடி, மட்டக்களப்பு
      வீரச்சாவு: 12.06.1990

  11) வீரவேங்கை தௌபீக்
      இயக்கப் பெயர்: தௌபீக்
      இயற்பெயர்: இஸ்மாயில்
      ஊர்: ஓட்டமாவடி, மட்டக்களப்பு
      வீரச்சாவு: 12.06.1990

  12) வீரவேங்கை ஜிவ்றி
      இயக்கப் பெயர்: ஜிவ்றி
      இயற்பெயர்: முகம்மது இலியாஸ்
      ஊர்: 4ம் வட்டாரம், மீராவோடை, வாழைச்சேனை, மட்டக்களப்பு
      வீரச்சாவு: 13.06.1990

  13) வீரவேங்கை அர்ச்சுன்
      இயக்கப் பெயர்: அர்ச்சுன்
      இயற்பெயர்: அகமட்
      ஊர்: ஓட்டமாவடி, மட்டக்களப்பு
      வீரச்சாவு: 14.06.1990

  14) வீரவேங்கை அன்வர்
      வீரச்சாவு: 15.06.1990

  15) வீரவேங்கை ஜலீம்
      இயக்கப் பெயர்: ஜலீம்
      இயற்பெயர்: முகமது இஸ்மாயில் மன்சூர்
      ஊர்: ஏறாவூர், மட்டக்களப்பு
      வீரச்சாவு: 01.09.1990

  16) வீரவேங்கை மஜீத்
      இயக்கப் பெயர்: மஜீத்
      இயற்பெயர்: மஜீத் முகமது இஸ்காக் கூப்சேக்அலி
      ஊர்: மீராவோடை
      வீரச்சாவு: 18.06.1990

  17) வீரவேங்கை ஜின்னா
      இயக்கப் பெயர்:ஜின்னா
      இயற்பெயர்: லெப்பைதம்பி
      ஊர்: செய்னூர் ஓட்டமாவடி, வாழைச்சேனை
      வீரச்சாவு: 19.06.1990

  18) கப்டன் பாறூக்
      இயக்கப் பெயர்: பாறூக்
      இயற்பெயர்: அகமதுலெப்பை முகமது கனீபா
      ஊர்: அக்ரைப்பற்று, அம்பாறை
      வீரச்சாவு: 07.01.1987

  19) வீரவேங்கை நகுலன்
      இயக்கப் பெயர்: நகுலன்
      இயற்பெயர்: யுனைதீன்
      ஊர்: அட்டாளைச்சேன
      வீரச்சாவு: 26.06.1988

  20) வீரவேங்கை அகஸ்ரின்
      இயக்கப் பெயர்: அகஸ்ரின்
      இயற்பெயர்: சம்சுதீன் அபுல்கசன்
      ஊர்: அக்கரைப்பற்று
      வீரச்சாவு: 27.10.1988

  21) வீரவேங்கை நசீர் 
      இயக்கப் பெயர்: நசீர் 
      இயற்பெயர்: சம்சுதீன் நசீர்
      ஊர்: ஒலுவில் அம்பாறை
      வீரச்சாவு: 17.02.1989

  22) வீரவேங்கை பாறூக்
      இயக்கப் பெயர்: பாறூக்
      இயற்பெயர்:  நாகூர்தம்பி பாயிஸ் ஆதாம்லெப்பை
      ஊர்: அககரைப்பற்று, அம்பாறை
      வீரச்சாவு: 22.06.1989

  23) வீரவேங்கை அஸ்வர்
      இயக்கப் பெயர்: அஸ்வர்
      இயற்பெயர்: ஜபார் ஜாபீர்
      ஊர்: அட்டாளைச்சேனை, அம்பாறை
      வீரச்சாவு: 06.12.1989

  24) வீரவேங்கை சியாத்
      இயக்கப் பெயர்: சியாத்
      இயற்பெயர்: மீராசாகிபு காலிதீன்
      ஊர்: சாய்ந்தமருது, அம்பாறை
      வீரச்சாவு: 06.12.1989

  25) வீரவேங்கை சுந்தர் (சந்தர்)
      இயக்கப் பெயர்: சுந்தர் (சந்தர்)
      இயற்பெயர்: அகமட் லெப்பை செப்லாதீன்
      ஊர்: வேப்பச்சேனை, அம்பாறை
      வீரச்சாவு: 25.05.1990

  26) வீரவேங்கை ராவ்
      இயக்கப் பெயர்: ராவ்
      இயற்பெயர்: முகமது ரபீக்
      ஊர்: பொத்துவில், அம்பாறை
      வீரச்சாவு: 15.06.1990

  27) வீரவேங்கை இராமன்
      இயக்கப் பெயர்: இராமன்
      இயற்பெயர்: மாப்பிள்ளை லெப்பை அல்வின்
      ஊர்: இறக்காமம், அம்பாறை
      வீரச்சாவு: 16.06.1990

  28) வீரவேங்கை கனியா
      இயக்கப் பெயர்: கனியா
      இயற்பெயர்: அபுசாலி புகாரி
      ஊர்: அக்கரைப்பற்று, அம்பாறை
      வீரச்சாவு: 15.07.1990

  29) வீரவேங்கை கப்டன் குட்டி (தினேஸ்)
      இயக்கப் பெயர்: கப்டன் குட்டி (தினேஸ்)
      இயற்பெயர்: முகமது அலிபா முகமது ஹசன்
      ஊர்: பேராறு, கந்தளாய், திருகோணமலை
      வீரச்சாவு: 28.04.1987

  30) வீரவேங்கை கசன்
      இயக்கப் பெயர்: கசன்
      இயற்பெயர்: ஆதம்பாவா கசன்
      ஊர்: மூதூர், திருகோணமலை
      வீரச்சாவு: 05.11.1989

  31) வீரவேங்கை 2ம் லெப்டினன்ட் சாந்தன்
      இயக்கப் பெயர்: 2ம் லெப்டினன்ட் சாந்தன்
      இயற்பெயர்: நைனா முகைதீன் நியாஸ்
      ஊர்: நிலாவெளி, திருகோணமலை
      வீரச்சாவு: 06.02.1990

  32) வீரவேங்கை ஜெகன்
      இயக்கப் பெயர்:  ஜெகன்
      இயற்பெயர்: ஆப்தீன் முகமட் யூசுப்
      ஊர்: குச்சவெளி, திருகோணமலை
      வீரச்சாவு: 15.06.1990

  33) வீரவேங்கை நியாஸ்
      ஊர்: மூதூர்
      வீரச்சாவு: 17.06.1990

  34) வீரவேங்கை கலையன்
      இயக்கப் பெயர்: கலையன்
      இயற்பெயர்: கச்சுமுகமது அபுல்கசன்
      ஊர்: 1ம் வட்டாரம், புல்மோட்டை, திருகோணமலை
      வீரச்சாவு: 14.06.1990

  35) வீரவேங்கை டானியல்
      இயக்கப் பெயர்: டானியல்
      இயற்பெயர்: கனீபா முகமது ராசீக்
      ஊர்: திருகோணமலை
      வீரச்சாவு: 22.06.1990

  36) வீரவேங்கை நிர்மல்
      இயக்கப் பெயர்: நிர்மல்
      இயற்பெயர்: அப்துல நசார்
      ஊர்: புடவைக்கட்டு, திருகோணமலை
      வீரச்சாவு: 27.07.1990

  37) வீரவேங்கை உஸ்மான் கிழங்கு
      இயக்கப் பெயர்: உஸ்மான் கிழங்கு
      இயற்பெயர்: அப்துல்காதர் சாதிக்
      ஊர்: யாழ்ப்பாணம்
      வீரச்சாவு: 25.08.1986

  38) வீரவேங்கை ரகீம்
      இயக்கப் பெயர்: ரகீம்
      ஊர்: யாழ்ப்பாணம்
      வீரச்சாவு: 08.05.1986

  39) வீரவேங்கை ரகுமான்
      இயக்கப் பெயர்: ரகுமான்
      ஊர்: யாழப்பாணம்
      வீரச்சாவு: 08.05.1986

  40) வீரவேங்கை சலீம்
      இயக்கப் பெயர்: சலீம்
      ஊர்: யாழ்ப்பாணம்
      வீரச்சாவு: 03.07.1987

  41) வீரவேங்கை கமால்
      ஊர்: மட்டக்களப்பு
      வீரச்சாவு: 07.06.1990

  42) வீரவேங்கை தர்சன் 
      இயக்கப் பெயர்: தர்சன்
      இயற்பெயர்: அப்துல் காதர் சம்சி
      ஊர்: காத்தான்குடி
      வீரச்சாவு: 13.06.1990

  43) வீரவேங்கை அன்வர்
      ஊர்: அட்டாளச்சேனை
      வீரச்சாவு: 15.06.1990

  44) வீரவேங்கை கபீர்
      ஊர்: அக்கரைப்பற்று, அம்பாறை
      வீரச்சாவு: 15.06.1990

  45) வீரவேங்கை அப்துல்மானாப் முகம்மது நசீம்
      ஊர்: கிண்ணியா
      வீரச்சாவு: 25.07.1986

  46) வீரவேங்கை மொகமட்
      ஊர்: மூதூர், திருகோணமலை
      வீரச்சாவு: 25.07.1986

  47) வீரவேங்கை பர்ஸாத்
      ஊர்: செட்டிக்குளம், வவுனியா
      வீரச்சாவு: 10.06.1990

  48) வீரவேங்கை ரவீஸ்
      ஊர்: ராமநாதபுரம், கிளிநொச்சி.
      வீரச்சாவு: 08.08.2006

  49) வீரவேங்கை கணேசன்
      இயக்கப் பெயர்: கணேசன்
      இயற்பெயர்: அப்துல்ஜபார் கணேசன்
      ஊர்: யாழ்ப்பாணம்
      வீரச்சாவு: 19.03.2007

  50) வீரவேங்கை தமிழ்மாறன்
      இயக்கப் பெயர்: தமிழ்மாறன்
      இயற்பெயர்: அப்துல் ரகுமான் நிமால்
      ஊர்: ஒட்டுசுட்டான், முல்லைத்தீவு
      வீரச்சாவு: 19.10.2000

  51) வீரவேங்கை வசந்தி
      இயக்கப் பெயர்: வசந்தி
      இயற்பெயர்: அப்துல்கரீம் கற்பகரூபவதி
      ஊர்: முள்ளியான், கட்டைக்காடு, யாழ்ப்பாணம்
      வீரச்சாவு: 26.06.1999

  52) வீரவேங்கை பர்சாண்
      இயக்கப் பெயர்: பர்சாண்
      இயற்பெயர்: அப்துல்காதர் சம்சுதீன்
      ஊர்: காக்கையன்குளம், வவுனியா
      வீரச்சாவு: 15.06.1990

  53) வீரவேங்கை நசீம் (கஜன்)
      இயக்கப் பெயர்: நசீம் (கஜன்)
      இயற்பெயர்: அப்துல்மானாப் முகமது நசீம்
      ஊர்: மூதூர், திருகோணமலை
      வீரச்சாவு: 25.07.1986

  55) வீரவேங்கை அருள்
        மன்னார்

  56) வீரவேங்கை மருதீன் எ முகமது
      இயக்கப் பெயர்: மருதீன் எ முகமது
      இயற்பெயர்: சந்திரயோகு மருத்தீன்
      ஊர்: உயிர்த்தராசன்குளம், மன்னார்
      வீரச்சாவு: 15.10.1987

  57) வீரவேங்கை பதூர்தீன் எ குஞ்சான்
      இயக்கப் பெயர்: பதூர்தீன் எ குஞ்சான்
      இயற்பெயர்: காலித்தம்பி காதம்பவா
      ஊர்: அக்கரைப்பற்று, அம்பாறை
      வீரச்சாவு: 07.06.1987

  58) வீரவேங்கை கசாலி
      இயக்கப் பெயர்: வீரவேங்கை கசாலி
      இயற்பெயர்: சேகு முகமது சகாப்தீன்
      ஊர்: ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை
      வீரச்சாவு: 23.05.1989

  59) வீரவேங்கை குமார்
      இயக்கப் பெயர்: வீரவேங்கை குமார்
      இயற்பெயர்: சேதுதாவீது காசிம்
      ஊர்: இரத்தினபுரம், கிளிநொச்சி
      வீரச்சாவு: 26.11.1988

  60) வீரவேங்கை கலீல்
      இயக்கப் பெயர்: வீரவேங்கை கலீல்
      இயற்பெயர்: கலீல் ரகுமான்
      ஊர்: தோப்பூர், திருகோணமலை
      வீரச்சாவு: 27.04.1988

  61) வீரவேங்கை அசீம் அஷாத்

  62) லெப். ராஜிவ் எ ரகீம் எ நஜீம்
      இயக்கப் பெயர்: ராஜிவ் எ ரகீம் எ நஜீம்
      இயற்பெயர்: காசிம் துலானி
      ஊர்: பட்டாணிச்சூர், புளியங்குளம், வவுனியா
      வீரச்சாவு: 15.09.1990

  63) லெப் அருள்
      இயக்கப் பெயர்: அருள்
      இயற்பெயர்: யூசப் ஜாசிர்
      ஊர்: உப்புக்குளம், வவுனியா
      வீரச்சாவு: 05.11.1995
   
  64) லெப். ஈழநாதன் எ ஈழமாறன் 
      இயக்கப் பெயர்: ஈழநாதன் எ ஈழமாறன்
      இயற்பெயர்: காதர்முகைதீன் சருதீன்
      ஊர்: ஒட்டருத்தகுளம், வவுனிக்குளம், முல்லைத்தீவு
      வீரச்சாவு: 07.04.1998

  65) கப்டன் நசீர்
      இயக்கப் பெயர்: நசீர்
      ஊர்: சாளம்பைக்குளம், வவுனியா
      வீரச்சாவு: 00.11.1990


  66) கடற்புலி லெப் கேணல் முல்லைமகள்
      இயக்கப் பெயர்: முல்லைமகள்
      இயற்பெயர்: முகைதீன் ஜெரீனா
      ஊர்: 50 வீட்டுத்திட்டம், கள்ளப்பாடு, முல்லைத்தீவு
      வீரச்சாவு: 19.06.2007

  67) கடற்புலி லெப் கேணல் மாறன் எ குன்றத்தேவன்
      இயக்கப் பெயர்: மாறன் எ குன்றத்தேவன்
      இயற்பெயர்: காதர்முகைதீன் நஜீம்கான்
      ஊர்: முல்லைத்தீவு
      வீரச்சாவு: 29.09.2008

  68) லெப். கேணல் அப்துல்லா
      இயக்கப் பெயர்: அப்துல்லா
      இயற்பெயர்: முகைதீன்
      ஊர்: காத்தான்குடி, மட்டக்களப்பு
      வீரச்சாவு: 02.04.2009

  உள்ளிட்ட பல முஸ்லிம் இளைஞர்கள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து போராடி வீரச்சாவடைந்து மாவீரர்களாகியுள்ள நிலையில் ஈரோஸ் அமைப்பில் இணைந்து மேலும் சில முஸ்லிம் இளைஞர்கள் மாவீரர்களாகியிருந்தனர்.

  01) ஈரோஸ் மாவீரர் நியாஸ்
  மன்னார்
  11.07.1986

  02) ஈரோஸ் மாவீரர் கஜன் எ நசீம்
  அப்துல் மானாஃப் முகம்மது நசீம்
  மூதூர், திருகோணமலை
  25.07.1986

  03) ஈரோஸ் மாவீரர் கசாலி
  சேகு முகமது சகாப்தீன்
  ஆலிம்சேனை, மூதூர், திருகோணமலை
  23.05.1989

  04) ஈரோஸ் மாவீரர் ரசிட்
  இயற்பெயர் அறியில்லை
  திருகோணமலை
  26.08.1989

  05) ஈரோஸ் மாவீரர் மிஸ்வின்
  இயற்பெயர் அறியில்லை
  அக்கரைப்பற்று, அம்பாறை
  09.11.1989

  Leave A Comment