• Login / Register
  • செய்திகள்

    தவறி விழுந்த மம்தா பானர்ஜி!

    மேற்கு வாங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    மேற்கு வங்க முதல்வரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி இன்று(26) ஹெலிகாப்டருக்குள் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    துர்காபூர் பகுதியில் ஹெரிகாப்டரில் ஏறும்போது நகரக்கூடிய படிக்கட்டுகளில் மம்தா நடந்து சென்றபோது கால் தவறி விழுந்துள்ளார். இதில் இவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரது பாதுகாப்புப் பணியாளர்கள் வந்து அவருக்கு முதலுதவி செய்தனர்.

    அசன்சோலுக்குச் செல்வதற்குத் திட்டமிட்ட நிலையில் துர்காபூரில் ஹெலிகாப்டரில் புறப்பட்டுச் சென்றபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

    முன்னதாக, கடந்த மார்ச் மாதம் கொல்கத்தாவில் உள்ள அவரது வீட்டில் தவறிவிழுந்து காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நெற்றியில் ஆழமான வெட்டுக்காயம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.



    Leave A Comment