ஜெகத் கஸ்பரின் லண்டன் கூட்டத்தில் தள்ளுமுள்ளு
அருட்தந்தை ஜெகத் கஸ்பர். இவர் பிரிட்டனின் தலைநகரமான லண்டனில் மே 5ஆம்தேதி தொடங்கி 7ஆம்தேதி வரை உலகத்தமிழ் பொதுநலச சமூக உருவாக்கம் மற்றும் எழுமின் 8ஆம் உலகத் தமிழ் தொழிலதிபர்கள் மற்றும் திறனாளர்கள் மாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தார்.
‘இது வெறும் தொழில் வணிக மாநாடல்ல, குளோபல் தமிழ் காமன்வெல்த் என்ற உலகத் தமிழ் பொதுநலச் சமூகம் உருவாக்கும் நெடும்பயணத்தின் தொடக்கம்’ என்று விமானம் ஏறும்முன் அவர் அறிவித்திருந்தார்.
இதற்கிடையே, ‘நிதி வசூலுக்காகவே ஜெகத் கஸ்பர் புதுப்புது திட்டங்களை வகுக்கிறார்’ என்ற ரீதியில் தமிழக ஏடு ஒன்று செய்தி வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஜெகத் கஸ்பரின் லண்டன்நிகழ்ச்சிகள் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கஸ்பரின் தமிழ் முனைவோர் மாநாட்டில் தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.
பிரிட்டன் வாழ் தமிழ் இளைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் கேள்வி கேட்பார்கள் என்பதற்காக காவல்துறையின் உதவியை கஸ்பர் நாடியிருந்தார். அதன்மூலம் தமிழ்இளைஞர்கள் கூட்ட அரங்கத்துக்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
அப்படியிருந்தும் தந்திரமாக உள்ளே நுழைந்த இளைஞர்களில் ஒருவர், ‘கஸ்பர் ஒரு திராவிட பினாமி” என்று அவரை நோக்கி முழக்கமிட்டார். காவல்துறை வரவழைக்கப்பட்டு அவர் தடுத்து உட்காரவைக்கப்பட, அதேவேளையில் ஜெகத் கஸ்பரை தமிழ் இளைஞர்கள் சூழ்ந்தனர். அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
ஜெகத் கஸ்பரின்
நிகழ்ச்சிகள் இனிமேல் தொடருமா என்ற
சந்தேகத்தை இந்த தள்ளுமுள்ளு ஏற்படுத்தியுள்ளது.
Leave A Comment