• Login / Register
  • ராசி பலன்கள்

    இந்த மாதம் எப்படி இருக்கு? சித்திரை மாத ராசிபலன்கள்!

    பிறந்துள்ள சித்திரை மாதத்தில் 12 ராசியினருக்குமான பொதுப் பலன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    அந்த வகையில், சிம்மம் - விருச்சிகம் வரையான நான்கு ராசியினருக்கும் சித்திரை மாத பலன்கள் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்கலாம்.

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தடைகள் நீங்கும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பண வரவு ஏற்படும். உடல் நலனில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக வரவேண்டிய பணம் வந்து சேரும். எதிர்பாராத இடத்திலிருந்து ஆதரவு கிடைக்கும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் தாமே செய்வதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். எதிர்ப்பாராத விருப்பமில்லாத இடமாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் ஏற்படும். தொழிலில் இருந்து வந்த தடைகள் நீங்கி நல்ல முன்னேற்றமான நிலை ஏற்படும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

    கன்னி:

    கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சாதகமான மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். உடல் நலனில் சிறுசிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் அனைத்தும் நீங்க ஒற்றுமை அதிகரிக்கும். திருமணம் கைகூடும். ஒரு சிலருக்கு கடன் அடைவதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும்.

    வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையை நிலவுகிறது. புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் ஏற்படும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் ஏற்படும். புத்திசாலித்தனத்துடன் செயல்படுவதன் மூலம் தொழிலில் இருந்து வந்த குழப்பங்களை நீக்க முடியும். நல்ல லாபத்தையும் பெற முடியும். வெளிநாடு தொடர்பான வணிகத்தை ஊக்குவிக்கவும். புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் சிறப்பான மாதமாக திகழப்போகிறது.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

    துலாம்:

    துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் நினைத்ததை முடிக்கும் மாதமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பண வரவு ஏற்படாது என்றாலும் செலவுகளை குறைத்துக் கொள்வதன் மூலம் கடன் வாங்கும் பிரச்சினையிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கவனம் தேவை. கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். திருமண முயற்சிகள் வெற்றியைத் தரும். வாகன யோகம் உண்டாகும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று அதிகமாகவே இருக்கும். அந்த வேலையை திறம்பட செய்வதன் மூலம் எதிர்பார்த்த பதவி உயர்வு ஊதிய உயர்வு கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் ஏற்படும். தொழிலை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். இருப்பினும் தொழிலில் புதிதாக ஒப்பந்தங்களை செய்வதற்கு முன் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து உடன் இருப்பவர்களை இருப்பவர்களிடம் ஆலோசித்து பிறகு முடிவெடுப்பது நன்மையை தரும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு மகாலட்சுமியை வழிபட வேண்டும்.

    விருச்சிகம்:

    விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் செல்வாக்கு உயரும் மாதமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை இதுவரை இருந்த தடைகள் நீங்கி நல்ல பண வரவு ஏற்படும். உடல் நலம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஒரு சிலருக்கு திடீர் பண வரவு ஏற்படுவதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும்.

    வேலையை பொருத்தவரை சாதகமான சூழ்நிலையை நிலவுகிறது. வேலையில் இதுவரை இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கி எதிர்பார்த்த சலுகைகள் கிடைப்பதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். புதிதாக வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிரிகளின் தொல்லைகள் நீங்கும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

    Leave A Comment