• Login / Register
  • ராசி பலன்கள்

    இந்த வாரம் எப்படி..? மேஷம் - கன்னி ராசிகளுக்கான பலன்கள்!

    15/04/2024 முதல் 21/04/2024 வரையான இந்த வாரத்திற்கான மேஷம் - கன்னி ராசிகளுக்கான ராசிபலன்.

    மேஷம்:

    மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு திருப்திகரமாக இருக்கும். நீண்ட நாட்களாக காத்திருந்த நல்ல செய்தி வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள் ஏற்படும் என்பதால் பேச்சில் கவனம் தேவை. நிதானத்துடன் பேசுவதன் மூலம் சண்டைகள் வராமல் தவிர்த்துக் கொள்ள முடியும். உறவினர்களின் வருகையால் நன்மைகள் உண்டாகும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். அதை திறமையாக செய்வதன் மூலம் உயர் அதிகாரிகளின் பாராட்டை பெறுவதோடு மட்டுமல்லாமல் நீண்ட நாட்களாக எதிர்பார்த்து இருந்த பதவி உயர்வு ஊதிய உயர்வு தொடர்பான சலுகைகள் கிடைக்கும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் இருந்து வந்த மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கி முழு ஆதரவு கிடைக்கும்.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

    ரிஷபம்:

    ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் உற்சாகமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு பணவரவு ஏற்படும். எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடையும். உணவுப் பழக்கத்தை சரியாக வைத்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும். கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை அதிகரிக்கும். கடன் தொடர்பான பிரச்சனைகளில் மாட்டிக் கொள்ளாமல் இருப்பது நன்மையை தரும். ஒரு சிலருக்கு ஆடை ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும்.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாக இருக்கும். வேலையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தானுண்டு தன் வேலை உண்டு என்று இருப்பது நன்மையைத் தரும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்ததை விட அதிக அளவு லாபம் கிடைக்கும். அந்த லாபத்திற்கு ஏற்றார் போல் அதிக அளவு உழைக்க வேண்டிய சூழ்நிலையும் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்தும் முயற்சிகள் வெற்றியைத் தரும்.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு துர்க்கை அம்மனை வழிபட வேண்டும்.

    மிதுனம்:

    மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சிகரமான வாரமாக திகழப் போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை பணவரவு திருப்திகரமாக இருக்கும். உடல்நலம் நன்றாக இருக்கும். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை இந்த வாரம் தவிர்ப்பது நல்லது.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையை பிறரிடம் ஒப்படைக்காமல் தாமே செய்வதன் மூலம் பிரச்சினைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைப்பது சற்று கடினமாகவே இருக்கும். தொழில் ரீதியாக மறைமுக எதிரிகளின் ஆதிக்கம் அதிகரிக்கும். கவனம் தேவை.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு மகாவிஷ்ணுவை வழிபட வேண்டும்.

    கடகம்:

    கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முன்னேற்றம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படும். அதற்கு இணையான செலவுகளும் உண்டாகும். திருமணம் முயற்சிகள் வெற்றி பெறும். பிறரிடம் பக்குவமாக நடந்து கொள்வதன் மூலம் பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம். நீண்ட நாட்களாக மேற்கொண்ட முயற்சிக்கு வெற்றிகள் கிடைக்கும். வீட்டில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கு வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை அதிகமாகவே இருக்கும். புதிதாக வேலைக்கு முயற்சி செய்யாமல் இருக்கும் வேலையிலேயே திறமையை காட்டுவதன் மூலம் நன்மைகள் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். இருப்பினும் புதிய முயற்சிகள் மேற்கொள்வதை தவிர்ப்பது நல்லது. உடன் பணிபுரிபவர்களிடம் அனுசரித்து செல்வதன் மூலம் நன்மைகள் உண்டாகும்.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு சிவபெருமானை வழிபட வேண்டும்.

    சிம்மம்:

    சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கவனமாக செயலாற்ற வேண்டிய வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர்பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்பட்டாலும் அதற்கு இணையான செலவுகள் ஏற்படும். செலவுகள் செய்யும் பொழுது கண்ணும் கருத்துமாக செய்வதன் மூலம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகாமல் தவிர்க்கலாம். திருமண முயற்சிகள் வெற்றியைத் தரும். பிறரிடம் பேசும் பொழுது கவனமாக பேசுவதன் மூலம் தேவையற்ற பிரச்சினைகள் வராமல் பார்த்துக் கொள்ளலாம். உடல் நலனில் கவனம் தேவை. மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

    வேலையை பொருத்தவரை வேலை சுமை சற்று குறைவாகவே இருக்கும். இருப்பினும் மறைமுக எதிரிகளால் பிரச்சினைகள் ஏற்படுவதற்குரிய வாய்ப்புகள் இருக்கிறது கவனம் தேவை. ஒரு சிலருக்கு புதிய வேலைக்குரிய வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்கும். தொழிலை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியைத் தரும். மேலும் தொழில் முன்னேற்றத்திற்குரிய உதவிகளும் தேடி வரும்.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு முருகப்பெருமானை வழிபட வேண்டும்.

    கன்னி:

    கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஏற்ற இறக்கம் நிறைந்த வாரமாக திகழப்போகிறது. பொருளாதாரத்தை பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு பணவரவு ஏற்படாது என்றாலும் செலவுகளை சமாளித்து விடுவீர்கள். ஒரு சிலருக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் பொறுமையை கையாளுவது நல்லது. குறுக்கு வழியில் எதையும் செய்யாமல் இருப்பது நல்லது.

    வேலையை பொருத்தவரை அதிக கவனத்துடன் வேலையை செய்வதன் மூலம் பாராட்டுகள் கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. ஒரு சிலருக்கு எதிர்பார்த்த சலுகைகளும் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். தொழிலைப் பொருத்தவரை எதிர் பார்த்த அளவிற்கு லாபம் கிடைக்க சற்று சிரமமாக இருக்கும். இருப்பினும் தொழிலை விரிவுபடுத்தும் வகையில் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தரும்.

    இந்த வாரம் மேலும் சிறப்பு மிகுந்த வாரமாக திகழ்வதற்கு விநாயகப் பெருமானை வழிபட வேண்டும்.

    Leave A Comment