ஜோ பைடனுக்கு கொவிட்-19 தொற்று; 3-வது முறையாக தொற்றுறுதியானது!
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜனாதிபதி பைடனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்ததை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின் போது கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே ஜோ பைடனுக்கு இரண்டு முறை கொவிட் -19 தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பின்னர் குணமடைந்தார்.
81 வயதான அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், தனது சுகவீனம் காரணமாக இன்று (18) நடைபெறவிருந்த அரசியல் பிரச்சாரக் கூட்டத்தையும் ரத்து செய்துள்ளார்.
Leave A Comment