துணை முதலமைச்சராக உதயநிதி - அவரே விளக்கம்!
உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அது தொடர்பில் அவரே விளக்கமளித்துள்ளார்.
திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக நியமிக்க இருப்பதான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், சென்னை தேனாம்பேட்டையில் திமுக இளைஞர் அணி 45-ம் ஆண்டு தொடக்க விழாவில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றிய போது அது தொடர்பில் விளக்கமளித்துள்ளார்.
நான் துணை முதலமைச்சராக போவதாக வரும் செய்திகள் வதந்தி. எந்த பதவி வந்தாலும் இளைஞரணி செயலர் பதவியே நெருக்கமானது. வதந்திகளை நம்பி சிலர் இப்போதே துண்டு போட்டு வைக்கிறார்கள் என்றார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது:
திமுகவில் பல அணிகள் இருந்தாலும் முதல் அணி இளைஞரணி தான்.
பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி பல முறை தமிழகத்திற்கு வந்தார்.
பிரதமர் மோடியின் வருகையை நிராகரித்து 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் வெற்றி அளித்துள்ளனர்.
பாஜக பொய் மட்டுமே பேசி அரசியல் செய்து வருகிறது.
திமுக கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெற இளைஞரணியும் ஒரு காரணம்.
சதிகளை முறியடித்து சாதனை ஆட்சியை 2026-லும் தொடர உறுதியேற்போம்.
திமுக இளைஞரணியினர் சமூக வலைதங்களில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
ஒவ்வொரு மாவட்டத்திற்கு என இன்ஸ்டாகிராம், பேஸ்புக், எக்ஸ் தளத்தில் புதிய கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சட்டசபை தேர்தல் வெற்றிக்கு திமுக இளைஞரணியினர் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும்.
இல்லம் தோறும் இளைஞரணி என்ற திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்.
நகரம் முதல் கிராமம் வரை ஒவ்வொரு இல்லத்திற்கும் சென்று திமுகவின் திட்டங்கள், சாதனைகளை எடுத்துக்கூற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
Leave A Comment