தங்கம் விலை ரூ.320 குறைவு; தங்க நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி!
சென்னையில் தங்கம் விலை சடுதியாக குறைவடைந்துள்ளமை தங்க நகைப் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 48 மணி நேரத்தில் சவரனுக்கு 320 ரூபா குறைவடைந்துள்ளது.
ஜூலை மாதம் தொடங்கிய போதே நகை விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் விற்பனை செய்யப்பட்டது.
நேற்று ஜூலை 9ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்த நிலையில் இன்று மீண்டும் கணிசமாக குறைந்துள்ளது.
இந்நிலையில் இன்று ஜூலை 10ஆம் தேதி 22 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் ரூ.6760க்கும், சவரனுக்கு ரூ.80 குறைந்து ஒரு சவரன் 54,080 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.9 குறைந்து ஒரு கிராம் ரூ.5537க்கும், சவரனுக்கு ரூ.72 குறைந்து ஒரு சவரன் ரூ.44,296க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை எந்த மாற்றமும் இன்றி ஒரு கிராம் வெள்ளி ரூ.99க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.99,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
Leave A Comment