• Login / Register
  • சோதிடம்

    விபரீத யோகங்களை அள்ளித்தரும் ரிஷபத்து குரு!

    மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியாகியுள்ள குரு பகவனின் மாற்றமானது சில ராசியினருக்கு விபரீத யோகங்களை அள்ளி வழங்கும் பெயர்ச்சியாக அமைந்துள்ளது.

    ரிஷபத்து குருவின் விபரீத யோக பலன்கள் மூலம் தன வரவு, திருமண யோகம் மற்றும் குழந்தை பாக்கியம் என்பன கிடைக்கும் வகையிலான பெயர்ச்சியாகவும் அமைய உள்ளது.

    நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக் கூடியவர் தான் இந்த குரு பகவான். ஒருவர் செல்வ செழிப்புடன் குழந்தை பாக்கியம், திருமண பாக்கியம், சமூகத்தில் நல்ல அந்தஸ்து என அனைத்து வித சௌபாக்கியத்துடன் வாழ காரணியாக இருப்பவர் இந்த குருபகவான்.

    இவர் ஆண்டிற்கு ஒரு முறை தன்னுடைய இடத்தை மாற்றிக் கொண்டே இருப்பார். இந்த குரு பகவானின் மாற்றமானது அனைத்து ராசிகளுக்கும் எப்பொழுதும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

    குருபகவான் கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி முதல் தனது சொந்த ராசியான ரிஷப ராசியில் பயணம் செய்து வருகிறார். இதன் மூலம் அனைத்து ராசிகளுக்கும் கட்டாயம் மாற்றம் உண்டு.

    இதன் மூலம் சில ராசிக்காரர்கள் விபரீத யோகங்களை பெறுகிறார்கள். ரிஷபத்து குரு மூலம் விபரீத யோகங்களை பெறப்போகும் அந்த ராசிக்காரர்கள் யார் என்பதை இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

    குருவால் ராஜயோகம் பெறும் ராசிகள்

    பொதுவாகவே குருவின் பார்வை ஒருவர் மீது பட்டால் அவர்கள் செல்வம் செழிப்பு குழந்தை பாக்கியம் திருமண யோகம் அந்தஸ்து ஆடம்பரம் என அனைத்திலும் முன்னணியில் இருப்பார்கள் நினைத்த வேலை இடமாற்றம் சொந்த வீடு இப்படியான வசதி வாய்ப்புகளும் தேடி வரும்.

    அப்படியான இந்த குருபகவான் தன்னுடைய இடப்பெயர்ச்சியின் மூலம் சில ராசிகளுக்கு நல்ல அனுகூலத்தை தருகிறார். அது குறித்த தெரிந்து கொள்ளலாம்.

    துலாம் ராசி:

    துலாம் ராசிக்காரர்களுக்கும் குரு பகவான் பல யோகங்களை தருகிறார் இதனால் எதிர்பாராத நேரத்தில் நிதி ஆதாயங்களை பெற முடியும் வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு சம்பள உயர்வு அதிகரிக்கும் புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும் தொழில் ரீதியான முன்னேற்றம் பெருமளவு இருக்கும் அதிர்ஷ்டங்கள் உங்கள் வீட்டு கதவை தட்டக் கூடும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமண யோகம் ஏற்படும் பணவரவில் இதுவரையில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். நிதி நிலைமை பல மடங்கு உயரக் கூடிய காலமிது.

    தனுசு ராசி:

    குருபகவான் தனுசு ராசிக்காரர்களுக்கும் பல சிறப்பான யோகங்களை தர உள்ளார். பங்கு சந்தையில் இருப்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும் புதிய தொழில் தொடங்கும் அவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் தேடி வரும். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும் வீடு மனை சுற்று வாங்கக்கூடிய யோகங்கள் உண்டாகும் குடும்பத்தில் நிம்மதி மகிழ்ச்சி அதிகரிக்கும் நண்பர்கள் உறவினர்களின் ஆதரவு கிடைக்கும் நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றத்தை பெறலாம்.

    கடக ராசி:

    குருவின் அனுகிரகத்தை பெறக் கூடிய ராசிகளில் கடக ராசியின் உண்டு கடக ராசிக்காரர்களுக்கு வருமானம் அதிகரிக்கும் புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் தேடி வரும் குரு பகவானால் திருமண வாழ்க்கை சுமுகமாக இருக்கும் குழந்தை பாக்கியம் வேண்டுபவருக்கு இந்த காலம் அதற்கான வாய்ப்பை வழங்கக் கூடியதாக அமைந்துள்ளது. நிதி நிலைமையில் நல்ல முன்னேற்றம் இருக்கும் பணக்கார யோகம் உங்களை தேடி வரும்.

    ஜோதிட சாஸ்திரத்தில் உள்ள பொதுவான கருத்துக்களின் படி தொகுக்கப்பட்ட பலன்களாகும். உங்கள் உங்கள் சுய ஜாதக அடிப்படையில் துல்லியமான பலன்களை அறிந்து கொள்ளுங்கள்.

    ஜோதிட நம்பிக்கை உள்ளவர்கள் இதனை பின்பற்றுங்கள்.

    Leave A Comment