உலகளாவிய மீம்ஸ் நாயகன் ‘கபோசு’ நாய் மரணம்; நெட்டிசன்கள் ஆழ்ந்த சோகம்!
உலகளாவிய மீம்ஸ் நாயகனாக வலம் வரும் 'கபோசு' நாய் தனது 18 ஆவது வயதில் மரணமடைந்துள்ள செய்தி நெட்டிசன்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
கபோசு நாய் கொடுக்கும் முக பாவனைகளைக் கொண்டு ஏராளமான மீம்ஸ்கள் வெளிவந்து உலகளாவிய நெட்டிசன்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.
பிரபலமான கதாபாத்திரங்களை மீம்ஸ்களில் குறிப்பிடுவது போன்று, கபோசுவை வைத்தும் தயாரிக்கும் மீம்ஸ்களும் பிரபலமானது.
ஜப்பானை சேர்ந்த ஒருவர் கடந்த 2008ம் ஆண்டு கபோசுவை தத்தெடுத்து வளர்த்து வந்துள்ளார்.
இதன்போது 2010ம் ஆண்டு கபோசுவைக் கொண்டு ஒரு போட்டோஷூட் நடத்தினார். கபோசு கொடுத்த அழகான போஸ்களும், ரியாக்ஷன்களும் இணையத்தில் பகிரப்பட்டு வெகுவான வரவேற்பினை பெற்றிருந்தது.
இதையடுத்து, நெட்டிசன்கள் கபோசுவின் இந்த புகைப்படங்களை மீம்ஸ்களாக உருவாக்கியதன் மூலம் பிரபலமானது.
தொடர்ந்து, 2013ம் ஆண்டில் கபோசுவின் படத்தை பயன்படுத்தி கிரிப்டோகரன்சியான Dogecoinஐ லோகோ உருவாக்க தூண்டியது.
மேலும் எலன் மஸ்க் ட்விட்டர் நிறுவனத்தை தன் வசப்படுத்திய பிறகு அதன் குருவி லோகோவை மாற்றி கபோசுவின் புகைப்படத்தை வைத்தார்.
பின்னர்தான் ட்விட்டர் எக்ஸ் நிறுவனமாக மாறியதும் வேறு புகைப்படம் மாற்றப்பட்டது.
18 வயதான கபோசு கடந்த 2022ம் ஆண்டு முதல் புற்றுநோய் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டு வந்ததை தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (மே-24) காலை தூக்கத்தில் அமைதியாக உயிரிழந்துள்ளது.
இதுகுறித்து Dogecoin தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள நிலையில் கபோசுவின் மறைவு பயனர்களுக்கு ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Leave A Comment