மூதாளர்களுக்கு கதைப்பதே ஒரு அருமருந்தாகும்!
மூதாளர்களுக்கு (Senior Citizen) கதைப்பதே (Talking) ஒரு அருமருந்தாகும் என்பதுடன் முதுமை காரணமாக ஏற்படும் பல்வேறு நோய் நிலைகளில் இருந்து அவர்களை விடுவிக்கவும் உதவுகின்றது.
எங்கள் ஒவ்வொருவரடைய வீடுகளிலும் வயது முதிர்வு நிலையை எட்டிய அம்மா, அப்பா, அம்மம்மா, அம்மப்பா, அப்பப்பா, அப்பம்மா, பாட்டன், பாட்டி, பூட்டன், பூட்டி உள்ளிட்டவர்கள் நிச்சயம் இருப்பார்கள்.
மூதாளர்கள், வயோதிகர்கள், முதியவர்கள் என்ற அடையாள பெயர்களுக்குள் வரையறுக்கப்பட்டு மூத்த குடிமக்களாக இருப்பவர்களுக்கு தயவுசெய்து இயன்றளவு கதைக்க சந்தரப்பங்களை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
பொதுவாக மூத்த குடிமகன்கள் அதிகமாக பேசுவார்கள். என்றாலும் அது நல்லதென்றே வைத்தியர்கள் கூறுகின்றனர்.
கீழ்காணும் அறிக்கையை பார்க்கவும்
வைத்தியர்களின் கருத்துப்படி ஓய்வுநிலையாளர்கள் (மூத்த குடிமகன்கள்) கட்டாயமாக அதிகம் கதைக்க வேண்டும்.
ஞாபகமறதியை தடுப்பதற்கு தற்போதைக்கு வேறு வழிகள் இல்லை. உள்ள ஓரேவழி அதிகம் கதைப்பதாகும்.
மூத்த குடிமகன்கள் அதிகம் கதைப்பதால் குறைந்தது மூன்று வகையான பலன்கள் உண்டு.
முதலாவது:
கதைப்பதானது மூளையின் செயற்பாட்டை தூண்டும் மற்றும் மூளையை ஊக்கப்படுத்தும்.
ஏனெனில் மொழியும் எண்ணமும் ஒன்றுக்கொன்று தொடர்பு கொள்கின்றன. குறிப்பாக வேகமாக பேசும்போது தானாகவே நினைப்பதன் பிரதிபலனாகும். மற்றும் ஞாபகசக்தியை மேம்படுத்தும்.
அதிகம் கதைக்காத மூத்த குடிமகன்கள் பெரும்பாலும் ஞாமக சக்தியை இழக்கின்றனர்.
இரண்டாவதாக:
கதைப்பது என்பது பல வகையான மண அழுத்தத்தி லிருந்து விடுவிக்கும். உளரீதியான நோய்களிலிருந்து
பாதுகாக்கும். மண அழுத்தத்தை குறைக்கும்.
கேட்டால் "ஒன்றும் இல்லை" என்போம். என்றாலும் நாம் நம் உள்ளத்தில் புதைத்துக் கொண்டு நாமே கவலைப்படு கின்றோம்.
இதுதான் உண்மை. எனவே மூத்த குடிமகன்களுக்கு கதைப்பதற்கு இடமளிப்பது மிகவும் சிறந்தது.
மூன்றாவது:
கதைப்பதானது முகத்தில் உள்ள தசைநார்களை ஊக்கப்படுத்தும். அதேநேரம் தொண்டைக்கு பயிற்சி யளிக்கும். மற்றும் நுரையீரலின் ஆற்றலை அதிகரிக்கும்.
அதேநேரம் தலைசுற்றல், காதுகேளாமை போன்ற கண்களினதும் காதுகளினதும் சீர்கேடுகளை குறைக்கும்.
சுருக்கமாக சொன்னால், ஓய்வுநிலையாளர்கள் (மூத்த குடிமகன்கள்) அல்ஸைமர் நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு ஒரே வழி இயன்றளவு கதைப்பதாகும். மற்றும் மனிதர்களுடன் உற்சாகமாக பழகுவதாகும்.
தொனதொனப்புகளாகவும், அலட்டல்களாகவும் எம்மால் கடந்து செல்லப்படும் மூதாளர்களின் உள்ளக்கிடைக்கைகள் வெளிவரவும் அவர்கள் மேற்குறித்த நன்மைகளை பெறவும் வேண்டுமாயின் அதனை செவிமடுக்கும் நல் உள்ளங்கள் வேண்டும்.
ஒரு நாளில் குறிப்பிட்ட சில மணி நேரங்களை எங்கள் எங்கள் வீடுகளில் இருக்கும் மூதாளர்களுக்காக ஒதுக்குவோம்.
இன்று வயோதிபதின்ன காரணமாக மூதாளர்களாக மூலையில் முடங்கிக் கிடப்பவர்கள் முன்னொருகாலத்தில் எங்கள் வாழ்வின் முதுகெலும்பாக உழைத்தவர்கள் என்பதை நினைவில் கொள்வோம்.
Leave A Comment