• Login / Register
  • ராசி பலன்கள்

    இந்த மாதம் எப்படி இருக்கு? ஆடி மாத ராசிபலன்கள் (தனுசு - மீனம் வரை)!

    பிறந்துள்ள ஆடி மாதத்தில் 12 ராசியினருக்குமான பொதுப் பலன்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

    அந்த வகையில், தனுசு - மீனம் வரையான நான்கு ராசியினருக்கும் ஆடி மாத பலன்கள் எவ்வாறு உள்ளது என்பதை பார்க்கலாம்.

    தனுசு:

    தனுசு ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் சிறப்பான பலன்கள் நிறைந்த மாதமாக திகழப் போகிறது. மன அமைதியும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். வேலையில் இருந்து வந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். முயற்சிகளுக்கு பலன்கள் தாமதமாகவே கிடைக்கும். ஒரு சிலருக்கு திடீர் யோகம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது.

    தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். கோபத்தை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். சவால்களை திறமையாக எதிர்கொண்டு சமாளித்து விடுவீர்கள். வேலையில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். அதனால் எதிர்பார்த்த பலன்களும் உண்டாகும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு ஆஞ்சநேயரை வழிபட வேண்டும்.

    மகரம்:

    மகர ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் மகிழ்ச்சிகரமான மாதமாக திகழப்போகிறது. இடம் வாங்கி வீடு கட்டும் யோகம் ஏற்படும். சொத்துக்கள் அதிக அளவில் சேர்வதற்குரிய வாய்ப்புகள் உள்ளது. கடன் சுமை குறைய ஆரம்பிக்கும். முயற்சிகள் வெற்றிகரமாக நடைபெறும். ராஜதந்திரமாக யோசித்து செயலாற்றுவீர்கள்.

    வேலையில் நல்ல பெயரை எடுப்பீர்கள். உங்களுடைய மதிப்பு அதிகரிக்கும். புகழ் அதிகரிக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்குரிய நிலை உண்டாகும். திறமைகள் வெளிப்படும். கணவன் மனைவிக்கிடையே கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். வேலை சுமை அதிகமாக இருக்கும். அதனால் வேலையை திட்டமிட்டு செய்வது நல்லது.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு பைரவரை வழிபட வேண்டும்.

    கும்பம்:

    கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் ஏற்ற இறக்கம் நிறைந்த மாதமாக திகழப் போகிறது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும். அரசாங்க வேலைகள் எளிதாக முடியும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறுவதற்குரிய வாய்ப்புகள் உள்ளது.

    வெளிநாடு செல்லும் யோகம் உள்ளது. பயணங்களால் நல்ல அனுபவம் ஏற்படும். சவால்களை சிறப்பாக கையாளுவீர்கள். கடன் வாங்குவதை தவிர்ப்பது நல்லது. மனதில் ஒருவித தெளிவு பிறக்கும். அதனால் மன வலிமை அதிகரிக்கும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு அம்மனை வழிபட வேண்டும்.

    மீனம்:

    மீன ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் அற்புதமான பலன்கள் தரும் மாதமாக திகழப் போகிறது. ஒரு சிலருக்கு சொந்தமாக வீடு வாங்குவது அல்லது வீட்டை புதுப்பிப்பது போன்ற காரியங்களில் ஈடுபடலாம். குடும்பத்தில் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் அவை அனைத்தையும் எளிதில் சமாளித்து விடுவீர்கள்.

    உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் இருப்பதால் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நன்மையை தரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். செல்வாக்கும், பதவி உயர்வும் கிடைப்பதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அதில் படிப்படியான முன்னேற்றத்தை உணர்வீர்கள். யாரையும் காயப்படுத்தி பேசாமல் இருப்பது நன்மையை தரும்.

    இந்த மாதம் மேலும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்வதற்கு வாராகி அம்மனை வழிபட வேண்டும்.

    Leave A Comment