முப்பலன்கள் கைகூடி வரும் சந்திர தரிசனம்; மூன்றாம் பிறை வழிபாட்டின் மகத்துவம்!
இன்றைய சந்திர தரிசனமானது முப்பலன்களை அள்ளித்தரும் விசேட நாளாக அமைந்துள்ளது.
ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால், மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு அழகாகவும், பிரகாசமாகவும் இருக்கும்.
மூன்றாம் பிறையானது இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையாகும்.
மூன்றாம் பிறையை தெய்வீக பிறை என்றே சொல்லலாம். இந்த மூன்றாம் பிறையைதான் சிவன் தன்முடி மீது அணிந்திருக்கிறார். மூன்றாம் பிறையை பார்த்தால் பேரானந்தமும், மன அமைதியும் கிடைக்கும். மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கும் என நம்பப்படுகிறது.
இன்று (07) வெள்ளிக்கிழமை மூன்றாம் பிறை சந்திர தரிசன நாளாகும்.
ஒவ்வொருவரும் தன் வாழும் வாழ்நாளில் நல்ல செல்வ வளத்துடன் நிம்மதியான வாழ்க்கையை வாழத் தான் விரும்புவார்கள். இந்த இரண்டையும் அருளக் கூடிய அற்புதமான தெய்வங்களாக திகழக்கூடியவர்கள் மகாலட்சுமி தாயார் சந்திர பகவானும்.
மகாலட்சுமி தாயார் ஆனது செல்வ வளத்தை வாரி வழங்கக் கூடியவர். அதே போல் சந்திர பகவான் ஆனவர் மனதை செம்மைப்படுத்தி நிம்மதியான முறையில் வாழ வைப்பவர்.
மூன்று தெய்வங்களின் அருளாசி கிடைத்திடும் அற்புத நாள் இன்றாகும்
இந்த இரண்டு தெய்வங்களையும் வணங்கக் கூடிய அற்புதமான நாளாக இன்றைய தினம் திகழ்கிறது.
வெள்ளிக்கிழமை மகாலட்சுமி அன்னையை வணங்க உகந்த நாள்.
அதே போல் மூன்றாம் பிறை சந்திர பகவானை வணங்க உகந்த நாள்.
இந்த மூன்றாம் பிறை வழிப்பாடானது சிவபெருமானின் அருளையும் நமக்கு பெற்று தரக் கூடியது.
அந்தவகையில் இன்றைய சந்திர தரிசனம் மகாலக்சுமி தயார், சந்திர பகவான், எல்லாம் வல்ல சிவபெருமான் ஆகிய மூன்று தெய்வங்களும் ஒருங்கே அருளாசிகளை வழங்கும் அற்புத நாளாக அமையப்பெற்றுள்ளது.
இத்தகைய அற்புதமான நாளில் நாம் செய்யக் கூடிய இந்த எளிய வழிபாடு நம்முடைய குடும்பத்தின் செல்வ நலனையும் நிம்மதியும் அதிகரிக்கும்.
செல்வ வளம் பெருக மூன்றாம் பிறை வழிபாடு
இந்த வழிபாட்டை இன்றைய தினம் மாலை 6 மணிக்கு மேல் 7:30 மணிக்குள்ளாக செய்வது சிறந்தது. அந்த நேரத்தில் செய்ய வாய்ப்பு இல்லாதவர்கள் 8 மணியிலிருந்து 9 மணி வரையிலான சுக்கிர ஹோரையில் செய்யுங்கள். ஆனால் இந்த வழிபாடு செய்யும் பொழுது சந்திர தரிசனத்தை பார்க்க வேண்டும்.
முதலில் வீட்டின் பூஜையறையில் ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். ஒரு சிறிய தட்டு கல் உப்பை பரப்பி அதன் மேல் ஒரு அகல் விளக்கை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுத் திரி போட்டு தீபம் ஏற்றுகிறது அடுத்ததாக ஒரு சிறிய தட்டி கொஞ்சம் பச்சரிசி மஞ்சள் கலந்து அர்ச்சனையாக தயார் செய்து கொள்ளுங்கள்.
பூஜை அறையில் வழிபட்ட பிறகு இந்த கல்லுப்பு அதன் விளக்கு தட்டையும் மஞ்சள் அரிசி கலந்த அட்சதை தட்டையும் வீட்டிற்கு வெளியில் கொண்டு சென்று சந்திர பகவானை பார்த்தவாறு வைத்து விடுங்கள்.
இப்போது பச்சரிசியை கையில் வைத்துக் கொண்டு சந்திர பகவானை பார்த்து உங்களுடைய மன குறைகள் பண தேவைகள் அனைத்தும் சரியாக வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.
இந்த வேண்டுதல் முடிந்த பிறகு பச்சரிசியை மேற்கு திசை பார்த்தவாறு தூவி விடுங்கள். இந்த வழிபாடு செய்யும்பொழுது உங்களுக்கு முன்பாக இந்த தீபம் எரிந்து கொண்டிருக்க வேண்டும். அதன் பிறகு கல் உப்பு தீபத்தை வீட்டிற்குள் கொண்டு வந்து பூஜை அறையில் வைத்து விட்டு மகாலட்சுமி தாயாரை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.
இந்த வழிபாடானது உங்களின் செல்வ வளத்தை பல மடங்கு பெருக்குவதுடன் வீட்டில் நிம்மதியை அதிகரித்து கொடுக்கும் உங்களுடைய மனப் பிரச்சனைகளையும் தீர்க்கும் என்றும் சொல்லப்படுகிறது.
இன்று ஒரே நாளில் மகாலட்சுமி தாயார் சுக்கிரன் சந்திர பகவான் சிவபெருமான் ஆகிய மூன்று தெய்வங்களின் ஆசியையும் பெற்றுத் தரும்.
பெண்களுக்கு மாங்கல்ய பலம் பெருக சந்திர தரிசன வழிபாடு
சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படும் என்பது நம்பிக்கை.
மூன்றாம் நாளில் சந்திர தரிசனம் காண்பவர்களுக்கு ஞாபக சக்தி அதிகரிக்கும். மனக்குழப்பம் நீங்கும். கண் பார்வை தெளிவாகும். மேலும் ஆயுள் கூடும் என்பது நம்பிக்கை.
சந்திரனின் பரிபூரண அருளைப் பெற சந்திர தரிசன வழிபாடு
சந்திரனின் நட்சத்திரங்களான ரோகிணி, அஸ்தம், திருவோணத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் இந்த மூன்றாம் பிறை தரிசனத்தை கண்டால் சந்திரனின் பரிபூரண அருளைப் பெறலாம்.
வற்றாத செல்வ வளம் பெற சந்திர தரிசன வழிபாடு
மூன்றாம் பிறையை தரிசனம் செய்தால், சிவனின் சிரசையே நேரில் தரிசனம் செய்ததாக அர்த்தம். தொடர்ந்து மூன்றாம் பிறையை தரிசித்து வருபவர்கள் வாழ்வில் வற்றாத செல்வ வளத்தை பெற்று பிரகாசத்துடன் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
இந்த வழிபாட்டை நம்பிக்கை உள்ளவர்கள் செய்து நல்ல பலனை பெறலாம் என்று இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
Leave A Comment