• Login / Register
  • செய்திகள்

    கனமழை; பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

    இடியுடன் கூடிய கனமழை காரணமாக தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் இன்றைய தினம் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    கனமழை பெய்து வரும் மாவட்டங்களுக்கு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டார்.

    தமிழகத்தில் இன்று  இடி மற்றும் மின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.

    இது குறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று (22.07.2024) இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்திருந்தது.

    இந்நிலையில் இன்று கனமழை பெய்து வருவதால், நீலகிரியில் உள்ள 4 வட்டங்களுக்கு மட்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

    இது குறித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு வெளியிட்ட அறிவிப்பில், இன்று 22.07.2024 நீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து காற்றின் வேகம் அதிகமாக இருக்கும் காரணத்தில் மாணவ மாணவர்களின் நலன் கருத்தில் கொண்டு உதகை, குன்னூர், கோத்தகிரி மற்றும் குந்தா ஆகிய வட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அளிக்கப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

    மேலும் தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment