• Login / Register
  • மேலும்

    இனிமேல் தமிழில் பேசினால்... வட்ஸ்அப்-இல் புதிய வசதி!

    சமூக வலைத்தளங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் வட்ஸ்சப் (Whats App) செயலியில் புதிய புதிய அப்டேட்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், வட்ஸ்அப் பயனாளர்களில் தமிழ் மொழி பேசுபவர்களுக்கு வொய்ஸ் நோட் (Voice Note) அனுப்பும் போது இலகுபடுத்தும் வகையில் புதிய வசதியை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    AI வந்த பிறகு மக்கள் அதிகம் பயன்படுத்தும் வட்ஸ்அப், எக்ஸ் உள்ளிட்ட செயலிகள் புதிய அப்டேட்டுகளை கொண்டு வந்து அசரடித்துக் கொண்டிருக்கின்றன. 

    இதுவரை கற்பனை செய்து கூட பார்க்கமுடியாத தொழில்நுட்ப அற்புதங்களை எல்லாம் பயனாளர்களில் இலகுவாக பயன்படுத்தும் வகையில் அப்டேட்டாகவும் அந்த நிறுவனங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

    அதன் தொடர்ச்சியாகவே வட்ஸ்அப் செயலியில் புதிய அப்டேட் ஒன்று விரைவில் வர இருக்கிறது.

    அதில் Voice நோட், Chatting உள்ளிட்டவைகளை எந்த மொழியில் வேண்டுமானாலும் நீங்கள் அனுப்பிக் கொள்ள முடியும்.

    அதற்காக, மொழி தெரியவில்லையே என்ற கவலை பட தேவையில்லை. உங்களுக்கு தெரிந்த மொழியில் Voice நோட் மற்றும் Chatting உருவாக்கி, அதனை விரும்பும் மொழிக்கு மாற்று என்ற ஒப்சனை கொடுத்துவிட்டால் அந்த வேலையை வட்ஸ்அப் பார்த்துக் கொள்ளும்.

    முதல்கட்டமாக போர்ச்சுகீஸ், அங்கிலம், ரஷ்யம், ஸ்பானிஸ் போன்ற மொழி சேர்க்கப்பட்டுள்ளது.

    இந்தியாவைப் பொறுத்தவரை இந்தி மொழி இந்த வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளதாம். பிராந்திய மொழிகளைப் பொறுத்தவரை விரைவில் படிப்படியாக விரிவாக்கம் செய்ய வட்ஸ்அப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

    வட்ஸ்அப் நிறுவனத்தின் இந்த புதிய வசதியை பயன்படுத்திக்கொள்ள கட்டணம் எல்லாம் தேவையில்லை. ஆனால் கூடுதலாக சில டேட்டாக்களை மட்டும் டவுன்லோட் செய்ய வேண்டியிருக்குமாம்.

    அதேநேரத்தில் இந்த அப்டேட் டெவலப்மென்ட் ஸ்டேஜில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    கூடுமானவரை சோதனை முயற்சிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Leave A Comment