• Login / Register
  • செய்திகள்

    செந்தில் பாலாஜி மீது கொலை வழக்கு... - எச்.ராஜா பரபரப்பு!

    தஞ்சாவூர் அருகே டாஸ்மாக் பார் கள்ளச்சந்தையில் மது வாங்கி குடித்த இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் அமைச்சர் செந்தில்பாலாஜி மீது கொலை வழக்கு பதிவு செய்ய முதல்வர் உத்தரவிட வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

    தஞ்சாவூர் அருகே கீழவாசல்(கீழ் அலங்கம்) பகுதியில் அரசு மதுபான கடை (கடை எண் 8123) செயல்பட்டு வருகிறது.

    இந்த மதுபான கடைக்கு அருகே பார் செயல்பட்டு வருகிறது. இந்த பாரில் கள்ளச் சந்தையில் மது விற்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் (21) இந்த பாரில் கடை திறப்பதற்கு முன்பே காலை 11 மணி அளவில் மது வாங்கி குடித்த மீன் வியாபாரி குப்புசாமி(68), கார் டிரைவர் விவேக்(36) ஆகியோர் சிறிது நேரத்தில் அடுத்தடுத்து வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கி விழுந்து இறந்தனர்.

    இதனையடுத்து குப்புசாமி என்பவரை மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் அவர் பரிதாபமாக உயர்ந்தார்.

    இதேபோல் அடுத்த பத்து நிமிடத்தில் அதே கடையில் அதே வகை மதுவை வாங்கி குடித்த விவேக் என்ற 36 வயது இளைஞனும் சாலையில் சுரண்டு விழுந்து உள்ளார். உடனடியாக அவரையும் மீட்டு தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அந்த இளைஞரும் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

    இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது எச். ராஜா இவ்வாறு தெரிவித்தார்.

    ராணிப்பேட்டை மாவட்டம் கீழ்விஷாரத்தில் உள்ள முத்துமாரியம்மன் ஆலயத்தின் ஊஞ்சல் சேவை நிகழ்ச்சியை பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு நடத்தும் டாஸ்மாக் மதுபானத்தை வாங்கி குடித்த இருவர் உயிரிழந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், டாஸ்மாக் கடைகள் இருக்கும் போது எப்படி கள்ளச்சாராய விற்பனை நடைபெறுகிறது என கேள்வி எழுப்பினார்.

    அரசு டாஸ்மாக் கடைகளில் கள்ளச்சாராயம் விற்கப்படுவதாக குற்றஞ்சாட்டிய அவர், இதன் மூலம் ஒரு ஆண்டுக்கு 1 லட்சம் கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளதாக கூறினார்.

    அரசு டாஸ்மாக் மதுபானம் குடித்து இருவர் உயிரிழந்த விவகாரத்தில், தமிழக அரசு முழுப்பொறுப்பையும் ஏற்று மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி மீது கொலை வழக்கு பதிவு செய்ய முதல்வர் உத்தரவிட வேண்டும் என தெரிவித்தார்.

    Leave A Comment