• Login / Register
  • மேலும்

    பன்முக வங்கியாகிறதா போஸ்ட் பேமன்ட் வங்கி?!

    இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கி பன்முக வங்கியாக மாறுவதற்கு  விரும்புவதாக அதன் நிரிவாக இயக்குநரும், தலைமை செயல் அதிகாரியுமான வெங்கட்ராமு தெரிவித்துள்ளார்.

    புதுதில்லியில் வெங்கட்ராமு கூறியதாவது: 

    2018 இல் தொடங்கப்பட்ட இந்தியா போஸ்ட் பேமண்ட் வங்கியின் 80 சதவீத பரிவிர்த்தனைகள் ரொக்கமாகவே இருந்தன. 

    தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்றுக்கொண்டதன் மூலம், 80 சதவீத பரிவர்த்தனைகள் டிஜிட்டல் முறையிலும், 20 சதவீதம் பரிவர்த்தனைகள் ரொக்கப் பரிவர்த்தனையாகவும் நடந்து வருகின்றன.

    நாடு முழுவதும் மூலை முடுக்கெல்லாம் சென்றடையும் நிறுவனமாக அஞ்சலகத்தின் தொடர்புகள் உள்ளதால், முழு அளவிலான வங்கி உரிமத்தைப் பெறுவதன் மூலம், நிதிச் சேர்க்கைக்கான பெரிய இலக்கை அடைய முடியும் என்று கூறினார்.

    வங்கி சாரா நிதி நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவை வழங்கி வரும் வெவ்வேறு நிதிச் சேவைகளை ஒரு சேர வழங்குவதே பன்முக வங்கியின் சேவை. அத்துடன் வணிக வங்கிச் சேவை, முதலீடு, காப்பீடு உள்ளிட்ட பிற நிதிச் சேவைகள் அனைத்தையும் பன்முக வங்கிகள் அளிக்கும். இத்தகைய பன்முக வாங்கியாக மாறுவதற்கு இந்தியா போஸ்ட் பேமன்ட் வங்கி(ஐபிபிபி) தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது.

    Leave A Comment