• Login / Register
  • சினிமா

    இந்த வாரம் ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ள திரைப்படங்கள்!

    ஓடிடி தளங்களில் திரைப்படங்களை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகிவுள்ளன என்பதைக் பார்க்கலாம்.

    ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்ற சிங்கப்பூர் சலூன் திரைப்படம் தற்போது அமேசான் ப்ரைம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

    நடிகர் மோகன்லால் நடிப்பில் வெளியான மலைக்கோட்டை வாலிபன் திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஹிந்தி மொழிகளில் வெளியாகியுள்ளது.

    பாமகலாபம் 2 என்ற தெலலுங்கு மொழி திரைப்படம் ஆஹா ஓடிடியில் வெளியாகியுள்ளது. தி இந்திராணி முகர்ஜி ஸ்டாரி என்ற திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

    நிமிஷா சஜயன், திபியேந்தி, ரோஷன் மேத்யூ நடிப்பில் வெளியான போச்சர் திரைப்படம் அமேசான் ப்ரைமில் வெளியாகியுள்ளது.



    Leave A Comment