• Login / Register
  • செய்திகள்

    திடீர் சரிவு; தங்கம் விலை 39 ஆயிரம் ரூபாவினால் குறைவு!

    இலங்கையில் தங்கம் விலை தொடர்ந்து குறைவடைந்து வரும் நிலையில் 9 நாட்களில் 39 ஆயிரம் ரூபாவினால் குறைவடைந்துள்ளது.

    இன்றைய (09) நிலவரப்படி இலங்கையில் இம்மாத தொடக்கத்தை விட 24 கரட் தங்கத்தின் விலை 39,000 ரூபாவினால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இம்மாத தொடக்கத்தில் 24 கரட் தங்கத்தின் விலை 184,000 ரூபாவாக இருந்தது.

    எனினும், இன்று (09) 24 கரட் தங்கத்தின் விலை 145,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

    இதேவேளை, 22 கரட் தங்கத்தின் விலை 170,000 ஆக இருந்ததுடன், தற்போது 134,000 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

    தங்கம் விலை இவ்வாறு சடுதியாக குறைவடைந்து வருகின்றமை தங்க நகை கொள்வனவுக்காக காத்திருக்கும் மக்களுக்கு அளவற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    Leave A Comment