• Login / Register
  • செய்திகள்

    தைவானில் தொடர் நில அதிர்வு: பீதியில் மக்கள்


    தைவானின் கிழக்குப் பகுதியான ஹுவாலினில் இன்று (23) அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் 6.3 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அடுத்தடுத்து பலமுறை நில அதிர்வு ஏற்பட்டது. 

    இதனால் மக்கள் அச்சத்தில் வீதிகளில் தஞ்சமடைந்தனர். இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாக இதுவரை தகவல் இல்லை.

    முன்னதாக, கடந்த 3 ஆம் தேதி தைவான் நாட்டின் தலைநகரான தைபேவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 

    இது ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவானது. அது, தைவானில் 25 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் எனக் கூறப்பட்டது. அதில் 14 பேர் பலியாயினர் .

    தைவானில் இந்த வாரம் முழுவதும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ள நிலையில், நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஹுவாலின் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 


    Leave A Comment