ஆஸ்கர் வென்ற பிரபல நடிகர் லூயிஸ் கோசெட் காலமானார்!
ஆஸ்கார் விருது வென்ற பிரபல ஹாலிவுட் நடிகர் லூயிஸ் கோசெட் ஜுனியர் காலமாகியுள்ளார்.
இவர் தி லேண்ட்லார்ட், அயன் ஈகிள், டிராவல்ஸ் வித் மை ஆன்ட், தி பிரின்சிபல், டாய் சோல்ஜர்ஸ் உட்பட பல படங்களில் நடித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவருக்கு சுவாசப் பிரச்சினையும் இருந்தது. இந்நிலையில், கலிபோர்னி யாவில் மறுவாழ்வு மையம் ஒன்றில் அவர் உயிரிழந்தார். அவருக்கு வயது 87. அவர் மறைவுக்கு ஹாலிவுட் திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இவர், ‘அன் ஆஃபிசர் அண்ட் எ ஜென்டில்மேன்’ (1982) படத்தில் சிறப்பாக நடித்ததற்காக, துணை நடிகருக்கான ஆஸ்கர் விருதை வென்றார்.
நடிப்புக்காக ஆஸ்கர் விருதை வென்ற, முதல் கருப்பின நடிகரான சிட்னி பாயிடிருக்குப் பிறகு (Sidney Poitier) இரண்டாவதாகப் பெற்ற நடிகர் இவர். ரூட்ஸ் (1977) என்ற டிவி தொடரில் நடித்ததற்காக எம்மி விருதையும் வென்றுள்ளார்.
Leave A Comment