• Login / Register
  • விளையாட்டு

    பிரேசில் 'கால்பந்து அரசன்' பீலே மறைவு!

    பிரேசிலின் முன்னாள் கால்பந்து வீரர் பீலே தமது 82 ஆவது வயதில் காலமானார்.

    வயிற்றில் ஏற்பட்ட புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த பீலே சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்ததாக செய்திகள வந்திருந்த நிலையில் அவர் காலமானார்.



    பிரேசில் 'கால்பந்து அரசன்' பீலே (82) மறைவையொட்டி, அந்த நாட்டில் மூன்று நாள்கள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    பிரேசில் அதிபர் ஜெயிர் பொல்சொனாரோ வெளியிட்டிருக்கும் அறிக்கையில், கால்பந்து விளையாட்டு வீரர் பீலேவின் மரணத்தைத் தொடர்ந்து வியாழக்கிழமை முதல் மூன்று நாள்களுக்கு நாடு முழுவதும் துக்கம் அனுசரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரேசில் கால்பந்து வீரர் பீலே வியாழக்கிழமை நள்ளிரவு காலமானாா். 

    செரிமான மண்டலப் பகுதி புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவா், கடந்த  ஆண்டுமுதல் அதற்காக சிகிச்சை பெற்று வந்தாா். பல்வேறு உடல்நலக்  கோளாறுகளுக்காக கடந்த ஒரு மாதமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பீலேவின் உடல்நிலையில் முன்னேற்றமில்லை.

    இந்நிலையில் அவா் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை நள்ளிரவு  இறந்தார். உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பிரேஸிலுக்கு 3 முறை சாம்பியன் பட்டம் (1958, 1962, 1970) வென்று தந்த பீலே, கடந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த விளையாட்டு வீரா்களில் ஒருவராகத் திகழ்ந்தாா்.



    சா்வதேச அரங்கில் பிரேஸிலுக்காக 14 ஆண்டுகள் 92 ஆட்டங்களில் களம் கண்ட பீலே, அதில் மொத்தமாக 77 கோல்கள் அடித்திருக்கிறாா். அதுவே லீக் போட்டிகள் உள்பட சீனியா் கேரியரை மொத்தமாக கணக்கில்கொண்டால் 700 ஆட்டங்களில் 655 கோல்கள் அடித்து அசத்தியிருக்கிறாா்.



    கால்பந்து ஜாம்பவானான பீலே, கடந்த 1958-ஆம் ஆண்டு ஸ்வீடனில் நடைபெற்ற போட்டியின் மூலம் உலகக் கோப்பை கால்பந்தில் அறிமுகமானாா். அப்போது 17 வயதையே எட்டியிருந்த அவா், உலகக் கோப்பை போட்டியில் களம் கண்ட மிக இளவயது வீரா் என்ற சாதனையை படைத்தாா்.



    கால்பந்திலிருந்து ஓய்வுபெற்ற பிறகு, பிரேசில் விளையாட்டுத் துறை அமைச்சராக 1995 முதல் 98 வரை பொறுப்பு வகித்திருந்தாா்.

    கால்பந்து விளையாட்டின் அரசனாக வா்ணிக்கப்படும் பீலேவின் மறைவுக்கு உலகமே அஞ்சலி செலுத்துகிறது.

    Leave A Comment