• Login / Register
  • விளையாட்டு

    2ஆவது வெற்றியை பெறுமா மும்பை அணி?

    15ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்றுடன் 50 லீக் போட்டிகள் முடிவடைந்தன. இந்த நிலையில் இன்று நடைபெறவுள்ள 51ஆவது லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதுகின்றன.

    இந்த போட்டி, மும்பை பிரபோர்ன் விளையாட்டரங்கத்தில் இன்றிரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

    ஐபிஎல் தொடரின் புதுமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் 10 போட்டிகளில் விளையாடி, 8 போட்டிகளில் வெற்றிப் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் குஜராத் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

    மற்றொரு புறம் 5 தடவை சாம்பியனான மும்பை அணி, 9 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.

    குஜராத் அணியை பொறுத்தவரை பேட்டிங் மற்றும் பவுலிங்கில் வலுவான அணியாக உள்ளது. தொடக்க வீரர்கள் பேட்டிங்கில் சொதப்பினாலும், டெத் ஓவர்களில் ராகுல் தெவாட்டியா, ரஷித் கான் போன்ற வீரர்கள் மிரட்டலான பேட்டிங்கால் அணியின் ரன்னை சர்வ சாதாரணமாக உயர்த்துகின்றனர்.

    பந்து வீச்சில் முகமது ஷமி, யாஷ் தயாள், லாக்கி பெர்குசன் அணிக்கு பலமாக இருக்கின்றனர்.

    மும்பை அணியில் பேட்டிங்கில், கேப்டன் ரோஹித் சர்மா தொடர்ந்து படுமோசமாக விளையாடி வருகிறார். ரோஹித் மற்றும் இஷான் கிஷன் ஜோடி இன்றைய போட்டியிலாவது ஒழுங்காக விளையாடுவார்களா என்பது சந்தேகமே.

    வழக்கம் போல் சூர்யகுமார், திலக் வர்மா மட்டுமே மும்பை அணியின் ரன்மெஷினாக இருக்கின்றனர்.

    பந்து வீச்சில் ரிலே மெரிடித், ஜாஸ்பிரித் பும்ரா சிறப்பாக செயல்படுவார்களா என்பதும் கேள்விக் குறியாகவே உள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் ஜாம்பவானான மும்பை இந்தியன்ஸ், இந்தாண்டு தொடரில் படுதோல்வியையே சந்தித்துள்ளது. 

    இன்றைய போட்டியில் மும்பை அணியின் முன்னாள் வீரரான ஹர்திக் பாண்டியாவின் குஜராத் அணியை, மும்பை அணி வீழ்த்தி ஆறுதல் வெற்றியாவது பெறுமா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

     

     

    Leave A Comment