• Login / Register
  • விளையாட்டு

    SLvsIRE 2nd TEST: அயர்லாந்து அணி 492 ஓட்டங்கள் குவிப்பு!

    இலங்கை அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் அயர்லலாந்து அணி 492 ஓட்டங்களை குவித்துள்ளது.

    சுற்றுலா அயர்லாந்து - இலங்கை அணிகளுக்கிடையேயான 2வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி காலி மைதானத்தில் நேற்று ஆரம்பமாகி நடைபெற்று வருகிறது.

    2வது நாளான இன்று தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து அணி 145.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 492 ஓட்டங்களை பெற்றுள்ளது.

    துடுப்பாட்டத்தில் அயர்லாந்து அணி சார்ப்பில் Curtis Campher 111 ஓட்டங்களையும் Paul Stirling 103 ஓட்டங்களையும் அணித்தலைவர் Andrew Balbirnie 95 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

    பந்துவீச்சில் பிரபாத் ஜெயசூரிய 5 விக்கெட்களையும் விஸ்வ பெர்ணான்டோ மற்றும் அசித பெர்ணான்டோ ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

    இதையடுத்து முதலாவது இனிங்சுக்காக துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி 2வது நாள் ஆட்ட நேர நிறைவில் விக்கெட் இழப்பின்றி 81 ஓட்டங்களை பெற்றுள்ளது.

    இலங்கை அணி சார்பில் மதுஷங்க - 41, கருணாரத்னே - 39 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுள்ளர்.

    இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ஓட்டங்களால் அபார வெற்றி பெற்று தொடரில் 1 : 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment