• Login / Register
  • விளையாட்டு

    ஷுப்மன் கில் அதிரடி; இரட்டை சதம் அடித்து சாதனை!

    இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இடம்பெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி  12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது.

    கடைசி ஓவர்களில் அதிரடியாக விளையாடி ஸ்கோரை வெகுவாக உயர்த்தினார் ஷுப்மன் கில். 145 பந்துகளில் இரட்டைச் சதம் எடுத்து சாதனை படைத்தார்.

    182 ரன்களில் இருந்தபோது தொடர்ந்து 3 சிக்ஸர்கள் அடித்து 200 ரன்களை எட்டினார். கடைசி ஓவரில் 208 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 149 பந்துகளில் 9 சிக்ஸர்கள்இ 19 பவுண்டரிகள் அடித்தார் கில். 

    ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம் அடித்த இளம் வீரர் (23 வயது) என்கிற சாதனையைப் படைத்தார். இரட்டைச் சதம் எடுத்த 5-வது இந்திய வீரர் என்கிற பெருமையையும் அடைந்தார் கில். 

    இந்நிலையில் 122 பந்துகளில் 150 ரன்களை எடுத்த ஷுப்மன் கில் அதற்குப் பிறகு அதிரடியாக விளையாடி 23 பந்துகளில் அடுத்த 50 ரன்களை அடித்து 200 ரன்களைப் பூர்த்தி செய்தார். 

    ஒருகட்டத்தில் 137 பந்துகளில் 169 ரன்கள் எடுத்திருந்த கில்இ அதற்குப் பிறகு எதிர்கொண்ட 11 பந்துகளில் 6 சிக்ஸர்களை அடித்தார். 

    Leave A Comment