• Login / Register
  • செய்திகள்

    நீட் தேர்வு விண்ணப்பிக்க மே 15 வரை கால அவகாசம் நீட்டிப்பு

    இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கான, அகில இந்திய அளவில் நீட் எனப்படும் தகுதித் தேர்வு தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில், இந்தாண்டு இளங்கலை மருத்துவப் படிப்புக்களில் சேர்வதற்கான, நீட் நுழைவுத் தேர்வுக்கு மே 6 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேர்வு முகமை ஏற்கெனவே அறிவித்து இருந்தது.

    இந்த நிலையில், தேர்வு முகமை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளதில், இளங்கலை மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வு எழுதுபவர்கள், வருகின்ற மே 15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவித்துள்ளது.

    மேலும், https://neet.nta.nic.in என்ற இணையதளத்தில், மாணவ மாணவியர்கள் விண்ணப்பித்துக் கொள்ளலாம் எனவும் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

    இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுகள் மே 17ஆம் தேதி நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. 



    இளங்கலை மருத்துவத் தேர்வு முறை:-

    200 மதிப்பெண்களுக்கு நீட் நுழைவுத் தேர்வு நடைபெறும். அனைத்து கேள்விகளுக்கும், ஒரு சரியான பதிலுடன் நான்கு விருப்பங்களைக் கொண்டிருக்கும் படி கேள்வித் தாள் அமைக்கப்பட்டிருக்கும்.

    தேர்வு இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரவியல் & விலங்கியல்) என மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாடத்திலும் 50 கேள்விகள் என, அவை இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறும்.

    இந்த நீட் இளங்கலை நுழைவுத் தேர்வுகள் மதியம் 2 மணி முதல் மாலை 05.20 மணி வரையென மொத்தம் 3 மணி நேரம் 20 நிமிடங்கள்  நடைபெறும்.


    Leave A Comment