• Login / Register
  • செய்திகள்

    சீனாவில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

    சீனாவின் சிச்சுவான் - லெஷான் நகரில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலியானோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. 

    இந்த நிலச்சரிவு லெஷான் நகருக்கு அருகே உள்ள ஜிங்கூஹே வட்டாரத்தில் இருக்கும் அரசுக்குச் சொந்தமான வன நிர்வாகப் பகுதியில் நிகழ்ந்துள்ளது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை 6 மணிக்கு நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. 

    இந்த நிலச்சரிவில் நேற்று 14 பேர் உயிரிழந்த நிலையில், இன்று பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். 

    சம்பவ இடத்தில் மீட்பு உபகரணங்கள் பயன்படுத்தி மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. 

    வனப்­ப­கு­தி­களை அதி­க­மா­கக் கொண்ட சீச்­சு­வான் மாகாணத்தில் அடிக்­கடி இயற்­கைப் பேரி­டர்­கள் நிகழ்­ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    Leave A Comment