• Login / Register
  • செய்திகள்

    மேட்டூா் அணையின் நீா்மட்டத்தில் சரிவு!

    மேட்டூா் அணையின் இன்றைய நிலவரப்படி  நீா்மட்டம் சரிந்து வருகிறது.

    மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவை விட குடிநீருக்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் சனிக்கிழமை மேட்டூா் அணை நீா்மட்டம் 103.38 அடியிலிருந்து 103.32 அடியாக சரிந்தது. அணையின் நீர் இருப்பு 69.21 டி.எம்.சியாக உள்ளது.

    மேட்டூா் அணையில் இருந்து குடிநீா்த் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு வியாழக்கிழமை காலை முதல் வினாடிக்கு 1000 கன அடியிலிருந்து, 500 கன அடியாக அதிகரிக்கப்பட்டு திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 905 கன அடியிலிருந்து 947 கன அடியாக அதிகரித்துள்ளது.


    Leave A Comment